பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் ஷட்டவுன் ஆவதற்கு முன்பு Windows is shutting down என்ற வாக்கியம் தோன்றும். பிண்ணனியில் பிராசஸ் நடைபெறுவதற்கான வட்டம் சுழன்றுகொண்டே இருக்கும்.
இதுதான் பொறுமையை சோதிக்கும் விடயம். ஷட்டவுன் கொடுத்த உடனேயே கம்ப்யூட்டர் ஆப் ஆகாதா? ச்சே..ச்சே…
என்று தொடர்ந்து மனம் எரிச்சலடையும்..என்றால், கண்டிப்பா அதுபோல ஆப் செய்ய முடியும். பவர் பட்டனை அணைக்காமலேயே முறையாக ஷட்டவுன் செய்து உடனடியாக கம்ப்யூட்டரை நிறுத்த முடியும்.
- முதலில் டாஸ்க் மேனேஜரைத் திறக்க வேண்டும்.
- டாஸ்க் மேனேஜரை திறக்க குறுக்குவிசைகள் (Ctrl+Alt+Delete)
- மேற்கண்ட விசைகளை ஒருசேர அழுத்தும்போது டாஸ்க் மேனேஜர் திறந்துவிடும்.
- அதில் Shut Down மெனு இருக்கும்.
- அதில் Turn off என்றிருப்பதை Ctrl பட்டனை அழுத்திக்கொண்டே அழுத்தினால் உடனடியாக உங்கள் கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகிவிடும்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக