பேஸ்புக் (Facebook)
பேஸ்புக் அதிக அளவில் பயன்படும் ஒரு சமூக தளம். பேஸ்புக் நிறுவனம்Facebook lite என்ற வசதியை Low Band width உள்ளவர்களுக்காக அறிமுகப்படுத்தியது. இது பலரிடையே வரவேற்பை பெற்றது. அதிக ஒப்பனைகள் இல்லாமல் மிக எளிமையாக இருந்ததும் ஒரு காரணம். தற்போது குயஉநடெடிம இந்த வசதியை நீக்குவதாக அறிவித்தது அதை செயல் படுத்தியும்விட்டது. இணைய ஜாம்பவானான கூகிள்-ஐ விட அதிகம் பயன்படுத்தும் ஒரு தளமாக Facebook மாறிவிட்டது. Facebook ல் வரும் விளம்பரங்களை ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் க்ளிக் செய்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
ட்விட்டர் (Twitter)
ட்விட்டர் தற்போது இணையத்தில் அதிக அளவில் பயன்படும் ஒரு சமூக தளம். இன்று ட்விட்டர் இல்லை என்றால் கை உடைந்ததை போல பலர் ஆகிவிடுமளவிற்கு அதற்கு அடிமையாகி விட்டனர். இணைய ஜாம்பவானான கூகிள் இதை வாங்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள், அந்த அளவிற்கு குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது. தற்போது இதன் முகப்பு பக்கத்தை மாற்றி, வணிகத்துக்காக இதை பயன் படுத்துபவர்களுக்கு ஆலோசனை பகுதி என்று பல புதிய மாற்றங்களை செய்துள்ளது.
லிங்க்டுஇன் (Linked in)
இதுவும் போஸ்புக் போல வளர்ந்து வரும் ஒரு சமூக வலைதளமாகும். டிசம்பர் 2002 இல் நிறுவப்பட்டு, மே 2003 இல் தொடங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், டச்சு, ஸ்வேதேச், ரோமானியம், ரஷியன், டர்கிச், ஜப்பனீஸ், செக் மற்றும் போலந்து ஆகிய மொழிகளில் பார்வையிடலாம். இத்தளத்தில் நாம் வேலை செய்யும் பணி பற்றிய தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டால் தங்களது தகுதிக்கேற்ப பல நிறுவனங் களிலிருந்து வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தெளிவாகும். 2011ல் பங்குகள் வர்த்தகத்தில் சேர்ந்து 65 சதவீதம் வளர்ச்சியும், 35 மில்லியன் பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.
கூகுள் (Google)
தற்போது இணையத்தில் கூகிள் தான் முன்னணியில் இருக்கிறது. கூகுளின் எண்ணற்ற வசதிகள் நம்மை திக்குமுக்காட வைக்கிறது. அதாவது, கூகுள்+, கூகுள்பஸ், கூகுள்குரோம், கூகுள் ஓஎஸ், கூகுள்மேப்ஸ், கூகுள்சாட், கூகுள்அப்ஸ், கூகுள் ப்ளாக்கர், கூகுள்பிக்நிக், கூகுள்ஜிமெயில், கூகுள் எர்த், கூகுள்யூடியூப், கூகுள் பிகாசோ, கூகுள்டிரைவ், கூகுள் ப்ரபைல், கூகுள் ஆண்ட்ராய்டு, கூகுள் எபிசோடிக், கூகுள் லேப்ஸ், கூகுள் ட்ரேன்சிலேஷன், கூகுள் ஆர்குட் போன்ற அனைத்து அம்சங்களும் இணையதளத்தில் நமக்காக காத்திருக்கிறது. நம் அன்றாட வாழ்வில் பல புதிய யுத்திகளைக் கையாளவும், நம் வாழ்வில் ஒரு அங்கமாக கூகுள் திகழ்கிறது. தினமும் பல பல புதிய மாற்றங்களை செய்து தன்னை புதுப்பித்துக் கொண்டே உள்ளது. குறுகிய காலத்தில் பல மில்லியன் மக்களை தன் பக்கம் இழுத்ததில் கூகிள்க்கு நிகர் கூகிள் தான், எளிமை, வேகம், புதுமை, பாதுகாப்பு இதுவே இதன் தாரக மந்திரம். ஏதாவது ஒன்றை கண்டு பிடித்தால் அதோடு நிறுத்திவிடாமல், மேலும் மேலும் அதில் புதிய உத்திகளை புகுத்துவது மாற்றம் செய்வது என்று அதன் ஆர்வம் சற்றும் குறையாமல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கூகிள் அளவிற்கு பயனாளர்களுக்கு வசதியை செய்து கொடுப்பது போல வேறு எந்த நிறுவனமும் இல்லை.
கூகுள்+ (Google+)
கூகுள் + பற்றி ஏற்கனவே பலர் அறிந்து இருப்பீர்கள். இது எதற்கு என்றால் ஏதாவது ஒரு தளத்தில் நீங்கள் படித்த ஒரு இடுகை (post) நன்றாக இருக்கிறது என்றால் அதை +1 கொடுக்கலாம். (இதற்கு நீங்கள் கூகுள் கணக்கில் நுழைந்து இருக்க வேண்டும்) இதைப்போல பலர் கொடுக்கும் போது தரமான லிங்க் (link)என்று கூகுள் தன்னுடைய தேடல் பக்கங்களில் முன்னுரிமை கொடுக்கும். இதன் மூலம் தரமான லிங்க்குகள் (links) நமது தேடலில் முன்னணி வகிக்கும்.
தற்போது இதில் ஒரு புதிய வசதியை சேர்த்துள்ளது. அதாவது நீங்கள் இதை க்ளிக் செய்தால் அதற்கு ஓட்டு விழுவதுடன் நீங்கள் படிக்கும் பக்கத்தை உங்கள் கூகுள் + ல் எளிமையாக பகிரவும் வசதி தருகிறது. தவறுதலாக ஓட்டுப்போட்டு விட்டோம் என்று கருதினால் மறுபடியும் அழுத்தினால் நீங்கி விடும்.
கூகிள் பஸ் (Google buzz)
கூகிள் பஸ் தற்போது பலரை கவர்ந்துள்ளது. கூகிள் வழக்கம் போல தனது குறைகளை சரி செய்வதிலும் புதிய வசதிகளை தருவதிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது (தற்போது கம்மன்ட்ஸ் கொலப்சை சரி செய்துள்ளது). இதன் மீது கூறப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டான பயனாளர்களின் விருப்பம் இல்லாமல் அவர்கள் பற்றிய செய்திகளை மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதை தற்போது சரிபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் buzz க்ளிக் செய்தால் உங்கள் அனுமதி வேண்டி நிற்கும். விரைவில் உங்களைப் பற்றி பஸ்ஸில் தேட வேண்டும் என்றால் அதற்காக ஜிமெயில் உள்ளே சென்று தேட வேண்டும் என்ற அவசியமில்லை. http://buzzy.com சென்று உங்கள் பெயரை தேடலில் குறிப்பிட்டால் போதும். உங்கள் பெயர் மற்றும் அதே பெயரில் உள்ள மற்றவர்கள் buzz செய்திகள் அனைத்தையும் பார்க்கலாம்.
கூகிள் செய்தி இல்லாத ஒரு இணையம் என்பது இயலாத காரியம். அந்த அளவிற்கு ஏதாவது ஒன்றை அறிமுகப் படுத்துவது, மேம்படுத்துவது, என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறது. கூகிள் அதிகாரபூர்வமாக கூகிள் பஸ் போஸ்ட் sharing button மற்றும் follow buttonஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குண்டான நிரலை (script) நீங்கள் மிக எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம்.
கூகுள் பிக்நிக் (Google picnik)
கூகிள் பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. அதில் தற்போது வாங்கி இருக்கும் நிறுவனம் தான் பிக்நிக். http://www.picnik.com இதன் பயன்பாடு என்னவென்றால், நமது படங்களை ஆன்லைனி லேயே எடிட் செய்யலாம். இதை யாஹூ வின் flickr.com தளம் தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தது. தற்போது கூகிள் வாங்கி விட்டது. கூகிள் பிரபலம் என்றாலும், அதன் மூலம் எடிட் செய்ய முடியாது. எனவே அதை சரி செய்ய இந்த நிறுவனத்தை வாங்கி உள்ளது.
கூகிள் க்ரோம் (Google Chrome)
கூகிள் க்ரோம் உலவி (Browser) பலரும் பயன்படுத்திக் கொண்டு இருப்பீர்கள், அதன் பயன்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. தற்போது இது பல நீட்சிகளை (நுஒவநவேடைளே) அறிமுகம் செய்து வருகிறது. எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாத அளவிற்கும், போதும் போதும் என்கிற அளவிற்கும் மேல் வசதிகளை குவித்து விட்டது.
கூகிள் க்ரோம் அண்ட் அடோப் ப்ளாஷ்
(Google Chrome & Adobe Flash)
அடோப்-ப்ளாஷ்-ன் பயன்பாடு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். மென்பொருள் இல்லாமல் நம்மால் இணையத்தில் இருப்பது என்பது இயலாத ஒன்று. பெரும்பாலான தளங்கள் வீடியோவிற்கு முக்கிய தேவையாக ப்ளாஷை தான் வைத்துள்ளன. அதை விட முக்கியமாக இணைய விளையாட்டுகளுக்கு இது அவசியம் தேவை. நாமே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கும் போது கூகிள் உணராமல் இருக்குமா! எனவே தான் தற்போது அடோபுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. கூகிள் க்ரோம் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.இதில் அடோப் ப்ளாஷை, க்ரோம் உடன் இணைத்து க்ரோம் பயனாளர்களுக்கு இன்னும் பல வசதியை தர கூகிள் திட்டமிட்டுள்ளது.
இனி க்ரோம் நிறுவினாலே உடன் அடோப் ப்ளாஷ்ம் இணைந்து வந்து விடும். அடோப் ப்ளாஷ் தனியாக நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. அடோப் ப்ளாஷில் புதிதாக அப்டேட் வந்தால் க்ரோம் உலவியே தானியங்கியாக அப்டேட் செய்து விடும். நீங்கள் இதற்காக எந்த முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. தற்போது இந்த வசதி Developer version ல் மட்டுமே வந்துள்ளது. விரைவில் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும்.
க்ரோம் ஓஎஸ் Vs டாக்ஸ்.காம்
(Chrome OS Vs Docs.com)
எதிர்காலத்தில் இணையம் தான் வாழ்க்கை என்றாகி விட்டது, அந்த அளவிற்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்து விட்டது. இதனை நன்கு உணர்ந்த கூகிள் தன்னுடைய Chrome OSஐ இணையத்தை அடிப்படையாக வைத்து தயாரித்து வருகிறது. இதனால் பலரால் விரும்பி பயன் படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே அனைத்து தகவல்களும் இணையத்தில் என்பதாகும். நீங்கள் உலகத்தின் எந்த இடத்திற்கு சென்றாலும் உங்கள் தகவல்களை, கோப்புகளை பயன்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்பு. அனைத்து இடத்திலும் google OSஐ பயன்படுத்த இணையம் அவசியம் என்பதை மறக்கக்கூடாது. இதை நன்கு உணர்ந்த மைக்ரோசாப்ட் இதற்கு போட்டியாக ஆரம்பித்துள்ளது தான் Docs.com. இங்கு நமது கோப்புகளை online லையே பார்க்கலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். Docs.com நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை தருகிறது. கூகிள் போல மைக்ரோசாப்ட்டும் இதற்கான பயன்பாட்டை உடனே தந்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழைப்பிதழ் மூலம் தருகிறது. எனவே இதன் மூலம் இயல்பாகவே இதன் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது.
கூகிள் வரைபட விளம்பரங்கள்
(Google Maps Advertisement)
விளம்பரத்தில் கூகிள் ஒரு புரட்சியே செய்து விட்டது என்று தான் கூற வேண்டும். எங்கெல்லாம் கண்களை உறுத்தாத விளம்பரம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தி அதிக லாபம் பார்த்துக்கொண்டு வருகிறது. கூகிள் விளம்பரத்தால் பயனடைந்தோர் ஏராளம். கூகிள் தற்போது தான் காட்டும் வரைபடத்தில் நிறுவனங்களின் லோகோவையும் காட்ட தீர்மானித்துள்ளது. அதாவது ஒரு இடத்தில் கடை இருக்கிறது என்றால் அந்த இடத்தில் அவர்களுடைய லோகோவை காட்டுவது, அதற்கு என்று கட்டணம் வசூலித்துக்கொள்வது. இதை தற்போது ஆஸ்திரேலியா வரைபடத்தில் செயல்படுத்தி உள்ளது. அனைத்து நாடுகளிலும் இதை விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. ஏதாவது நிறுவனம் அல்லது வங்கியின் இடம் தெரிய வேண்டும் என்றால் அவர்கள் கூகிளிடம் இதற்கு கட்டணம் செலுத்தினால் அவர்கள் அந்த இடத்தில் இவர்கள் லோகோவை போட்டு விடுவார்கள். வரைபடத்தை பார்ப்பவர்கள் எளிதாக தங்களுக்கு தேவையான இடத்தை கண்டுபிடிக்க முடியும்.
கூகிள்அப்ஸ் (Google Apps)
கூகிள்அப்ஸ் (Google Apps) இது பற்றி சிலர் தெரிந்து இருக்கலாம் பலர் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இது கூகிள் மற்ற நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் பல வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பு. பல நிறுவனங்கள் குறிப்பாக பள்ளி நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சல் சேவை உட்பட பல சேவைகளை (Google Apps) நிறுவனத்துடன் செய்து வருகிறது. இதற்கு கூகிள் தனியாக கட்டணம் வசூலிக்கிறது. குறைந்த வசதியுடன் இலவசமாகவும் இதைப் பயன்படுத்தலாம். பணம் பெற்று சேவை தருவதால் மின்னஞ்சல் உட்பட அனைத்து சேவைகளும் தங்கு தடையின்றி 100சதவீதம் உத்திர வாதத்துடன் கிடைக்கும். இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 35 மில்லியன் ஆகிவிட்டது என்று அறிவித்துள்ளது. இதை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்த முடியாது. குறிப்பாக வங்கிகள், காரணம் பாதுகாப்புதான். என்னதான் கூகிள் பாதுகாப்பு தரும் என்றாலும் தங்களை பற்றி விவரங்களை தங்கள் பயனாளர் கள் விவரங்களை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க வங்கிகள் விரும்ப மாட்டார்கள்.
கூகிள் சாட் (Google chat)
கூகிள் பல புதிய வசதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. கூகிள் உரையாடியில் (chat) ஏற்கனவே இதன் வீடியோ மற்றும் பேச்சு உரையாடல்(voice chat) மிகவும் பிரபலமாக உள்ளது. தொலைபேசியில் பேசுவதைவிட இதில் மிகத்தெளிவாக இருக்கும். தற்போது ஃபைல்களை அனுப்பும் வசதியை தந்துள்ளது. இதன் மூலம் படங்கள் ஃபைல்கள் போன்றவற்றை எளிதாக அனுப்பலாம். இந்த வசதி இல்லாமல் இருந்தது பலருக்கு சிரமமாக இருந்தது. தற்போது இந்த வசதி அனைவரிடமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக நீங்கள் எந்த மென்பொருளையும் தனியாக நிறுவ வேண்டிய அவசியமில்லை.
கூகிள் ப்ளாக்கர் vs வோர்ட் பிரஸ்
Google Blogger vs Wordpress
எப்படி மைக்ரோசாப்ட் விண்டோசை விரும்பாமல் ஒரு சிலர் (பலர்) லினக்ஸ் (Linux) விரும்புகிறார்களோ, அதே போல ப்ளாக்கரை விரும்பாமல் அதன் போட்டி தளமான வோர்ட் பிரஸ்(Wordpress) ஐ பலர் விரும்புகிறார்கள். இதன் எண்ணிக்கை தற்போது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. வழக்கமான ப்ளாக்கர்கள் தவிர இதையே தொழிலாக வேலையாக செய்பவர்கள் வோர்ட் பிரஸ் பயன்படுத்தவே விரும்புகிறார்கள். இவர்கள் மூலம் பலர் தற்போது வோர்ட் பிரஸ் க்கு மாறி வருகிறார்கள். இருந்தாலும் இன்னும் பிளாக்கர் தான் முன்னணி வகிக்கிறது. மற்றும் பயன்பாடு எளிதாக உள்ளது. வோர்ட் பிரஸ் தளங்களே ஒரு தொழில்முறை தோற்றத்தைத் (professional look) தருகிறது.
நீங்கள் வேலைக்கு செல்லாமல் இணையத்தின் மூலமாக சம்பாதிப்பவராக இருந்தால் நிச்சயமாக ப்ளாக்கர் தளம் இல்லாமல் வோர்ட் பிரஸ் தளம் தான் வைத்து இருப்பீர்கள். இது ஆங்கில வலை பூக்களுக்கு தான் அதிகம் பொருந்தும். காரணம், அவர்கள் தான் அதிகம் தொழில்நுட்ப தளங்கள் வைத்துள்ளார்கள். மற்றும் அதை விட முக்கிய காரணம். கூகிள் மற்றும் பல நிறுவனங்கள் ஆங்கில வலைப்பூக்களுக்கே விளம்பரங்களை பிரச்சனை இல்லாமல் தருகின்றனர்.
டம்ளர்(Tumblr)
ப்ளாக்கர்கள், வோர்ட் பிரஸ் (Blogger, Wordpress) போல வலையுலகில் கலக்கி வரும் இன்னொரு தளம் டம்ளர் (Tumblr) ஆகும். 2007 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. வோர்ட் பிரஸ் (Wordpress)க்கே போட்டியாக உள்ளது. அந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 28 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகிறார்களாம். இணையத்தில் யாரும் நிரந்தரம் இல்லை என்பதற்கு உதாரணமாக டம்ளர் உள்ளது
கூகுளும் Vs சீனாவும்
சீன கம்யூனிச அரசு கடுமையான கட்டுப்பாடுகளை கூகிள்க்கு விதித்ததாலும், பல ஹேக்கர்கள் கூகிள் தளத்தில் "விளையாடியதால்" லும் சீனாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்து விட்டது. சீனாவில் கூகிள் தேடுதலை விட, அவர்களுடைய சொந்த நாட்டுன் தேடுதல் தளத்தை (Search Engine) தான் மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அவர்களும், இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. கூகிளுடன் பிரபல கள பெயர் - டொமைன் நேம் (domain name) வழங்கியான Godaddy.com சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனையில் இனிமேல் .cn வழங்கு வதை நிறுத்திக்கொள்ள போவதாக அறிவித்து விட்டது. சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வில்லை என்றால், தற்போது இல்லை என்றாலும் பின்னாளில் இதற்காக கண்டிப்பாக
வருத்தப்படும். இதனால் இந்தியாவிற்குத் தான் ரொம்ப லாபம்.
கூகிள் மின்னஞ்சல் பாதுகாப்பு
கூகிள் தனது மின்னஞ்சலுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்க நினைக்கிறது. அதை அவ்வப்போது செயல்படுத்தியும் வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய வசதி என்னவென்றால், நமது மின்னஞ்சலை வேறு வேறு நாட்டிலிருந்து யாராவது பயன்படுத்தினால், தற்போது இந்த நாட்டில் இருந்து இதை யார் பயன்படுத்தி உள்ளார்கள் என்று கூறும் (இந்த வசதி ஏற்கனவே Facebookல் உள்ளது). நாம் எங்கும் செல்ல வில்லை இடம் மாறவில்லை என்றால், யாரோ நம் மின்னஞ்சலை ஹேக் செய்கிறார்கள் என்று புரிந்து உடனடி யாக நமது கடவுச்சொல்லை மாற்றி விடலாம். ஒருவேளை நீங்கள் வேறு நாட்டிற்கு சென்று இருந்தால் இந்த அறிவிப்பை ஒதுக்கி விடலாம்.
கூகுள்+ vs பேஸ்புக்
கூகுள்+ வந்ததும், பேஸ்புக் (Facebook)ல் தினம் தினம் புதிய வசதிகளை கொடுத்து வருகிறது. இவர்கள் சண்டையால் இதைப் பயன்படுத்துபவர்களுக்கு ரொம்ப நல்லதாக உள்ளது. புதிய வசதிகள் கிடைத்து வருகின்றன. போட்டி இருந்தால் தான் எவரும் சிறப்பான சேவைகளைத் தருவார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். தற்போது தரும் சேவைகளை எல்லாம் பேஸ்புக்(Facebook) நினைத்து இருந்தால் எப்போதோ தந்து இருக்க முடியும். எப்போதுமே போட்டி இருந்தால் தான் எதிலும் தரம் இருக்கும் என்பதை அனைவரும் உணரலாம்.
முன்பு குழப்பமாக இருந்த பல விஷயங்கள் தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. கூகுள் பயன்படுத்துபவர்கள் சமீபமாக பல மாற்றங்களை கவனித்து இருக்கலாம். இவை அனைத்துமே கூகுள்+ வந்த பிறகு வந்த மாற்றங்கள்தான். தற்போது தனித்துவ (Privacy) முறையில் மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் (எவரும் பார்க்க முடியும்) நண்பர்கள் என்று நமது வசதிக்கேற்ப ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யலாம். அதோடு படங்களை நம்முடைய ஃப்ரொபைலில் இனி யாராவது செய்ய வேண்டும் என்றால், நம்முடைய அனுமதி பெறவேண்டும். இதன் மூலம் நமக்கு ஏற்படும் தர்மசங்கடங்களை தவிர்க்கலாம். 1 ட்ரில்லியன் (Facebook) பக்கங்கள் (ஒரு மாதத்தில்) இணையத்தில் பார்க்கப்பட்டு சாதனை புரிந்து இருக்கிறது.
கூகுள்+ போலியாக பெயர்
கூகுள்+ ல் போலியாக பெயர் வைத்து இருந்தவர்கள் பலரது கணக்குகளை கூகுள் முடக்கி விட்டது. உண்மையான பெயர் உள்ளவர்கள் மட்டுமே தற்போது கூகுள்+ ல் கணக்கு துவங்க முடியும். வேறு பெயர் வைத்து துவங்கினாலும் ஒன்றும் பிரச்சனை இருக்காது. ஆனால் பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டால் உங்களிடம் கூறாமல் கணக்கு முடக்கப்படும். இது குறித்து பல சர்ச்சைகள் உள்ளது. ஆனால் கூகுள் சேர்மன் Eric Schmidt உண்மையான பெயரோட இருந்தால் இருங்கள் என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கு சில விதிவிலக்குகளுடன் கூடிய விதிமுறைகளை கூகுள் கூறியுள்ளது.
தற்போது பிரபலங்களுக்கு ட்விட்டர் (twitter) போல. இவர் உண்மையான ஆளு தான், உண்மையான பெயர் தான் என்று கூறும் வசதியை கூகுள்+ ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒபாமா ஒரு கணக்கு வைத்து இருந்தால், இவர்தான் உண்மையான ஒபாமா என்று கூகுள் உறுதிப்படுத்தி இருக்கும். இவர் பெயரை பயன்படுத்தி தவறு செய்ய முடியாது.
மற்ற மின்னஞ்சல் யாஹூ, ஹாட்மெயில் நிறுவனங்களில் இருந்து தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை தற்போது பலர் கூகிள்க்கு மாற்றி விட்டார்கள். தனது மின்னஞ்சல் சேவையில் பல வசதிகளை வெளிப்படையாகவும், பல வசதிகளை வேண்டும் என்றால் பயன்படுத்திக்கொள்ளும் படியும் அமைத்துள்ளது, இதை ஆய்வுகூடமாக(Labs)கூறுகிறது. இதில் பல பயனுள்ள விஷயங்கள் உள்ளது, இதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இதை நீங்கள் கூகிள் மின்னஞ்சலில்Settings ஐ சொடுக்கினால் அதில் (Labs) என்று இருக்கும், அதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள், அதில் சில முக்கிய மானவற்றின் பயனை பார்ப்போம்.
Inserting Images: இதன் பயன் என்னவென்றால் படங்களை நமது விருப்பப்படி மின்னஞ்சல் அனுப்பும் போது அமைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக பார்வர்ட் மின்னஞ்சல்களுக்கு மிகவும் பயன் தரும். படத்தை பற்றி விளக்கம் பிறகு படம், இதே போல விளக்கங்கள் கூறி படங்களை இணைக்கலாம், இல்லை என்றால் மொத்த படங்களும் இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும். அதன் விளக்கங்கள் எதற்கு என்று தெரியாமல் அணிவகுத்து இருக்கும்.
Default Reply to all: ஒரு சிலர் குழுவாக (தனி குழும மின்னஞ்சல் இல்லாமல்) அடிக்கடி தனது நண்பர்களுக்குள் மின்னஞ்சல் செய்பவர்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இதை இணைத்தால் Reply to all என்பது வலது ஓரத்தில் மேலே வந்து விடும் (வழக்கமாக இருக்கும் Reply ம் இருக்கும்) இதனால் எளிதாக அனைவருக்கும் அனுப்பலாம்.
Hide Unread Counts: முன்பெல்லாம் மின்னஞ்சல் வருவது குறைவு. தற்போதெல்லாம் நண்பர்கள் மின்னஞ்சல், குழும மின்னஞ்சல், பல தளங்களில் சப்க்ரைப் (subscribe) செய்து இருந்தால் அந்த மின்னஞ்சல்கள் என ஏகப்பட்டது வருகிறது. இது எத்தனை வந்துள்ளது என்ற எண்ணிக்கை Inboxல் தெரியும், இது உறுத்தலாக தெரிந்தால் இந்த எண்ணிக்கையை இதை இணைப்பதின் மூலம் மறைக்கலாம்.
Right side chat:கூகிள் உரையாடியில் (chat)மறைந்து இருக்கும் (Invisible mode)வசதி இல்லை, ஆனால் கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் இது உள்ளது. இதனால் பலர் இந்த வசதியை பயன்படுத்த கூகிள் மின்னஞ்சலில் உள்ள உரையாடியில் தான் இணைந்து இருப்பார்கள். இது வழக்கமாக இடது புறத்தில் இருக்கும், அதனுடன் டுயடெநகள் இருப்பதால் ரொம்ப கீழே இருக்கும். இதை தவிர்க்க இதை இணைத்தால் உரையாடி பகுதி வலது புறத்தில் மாறி விடும்.
Pictures in chat: இதை இணைப்பதின் மூலம் நம்முடன் உரையாடுபவர் படம் (அவர்கள் இணைத்து இருந்தால்) நமக்கு தெரியும்.
Mark as read: தேவையற்ற மின்னஞ்சல்கள் பல நமக்கு வரும் அல்லது அந்த மின்னஞ்சலில் என்ன இருக்கும் என்று முன்பே தெரியும். எனவே படிக்காத மின்னஞ்சல்களாக (unread mails) இருப்பது எரிச்சலை தரலாம். எனவே அவை அனைத்தையும் மொத்தமாக தேர்வு செய்து Mark as read பொத்தானை அழுத்துவதன் மூலம் அனைத்தும் படிக்கப்பட்ட மின்னஞ்சல்களாக (read) மாறி விடும்.
You Tube Previews in mail : இது நமக்கு You Tube சுட்டி (link) மின்னஞ்சலில் வந்தால் அதன் முன்னோட்டத்தை நமக்கு மின்னஞ்சலின் கீழ் பகுதியில் சிறிய அளவில் காட்டும். நாம் மவுஸை எடுத்துச் (mouse) செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதைப்போல வசதி ஞைஉயளய மற்றும் Flickr க்கு உண்டு.
Undo Send: இது மிகவும் பயனுள்ள ஒன்று, நாம் எப்போதும் அவசரமாக ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மாற்றி தவறுதலாக மற்ற ஒருவருக்கு அனுப்பி விடுவோம். இதற்கு தான் கூகிள் தரும் இந்த வசதி. நாம் மின்னஞ்சல் அனுப்பிய பிறகு அதை கூகிள் அனுப்பாமல் சில நொடிகள் வைத்து இருக்கும், அதற்குள் நம் தவறை உணர்ந்து விட்டால் Undo Send ஐ அழுத்துவதன் மூலம் அதை அனுப்பாமல் தவிர்க்கலாம்.
ஜிமெயில் (Gmail)
மின்னஞ்சலுக்கான அணுகுமுறை
மின்னஞ்சலானது மிக இயல்பான தாகவும், அதிக திறனுடனும், பயனுள்ள தாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டது.
அதிக இடம், இலவச சேமிப்பிடம். குறைந்த ஸ்பேம், தேவையற்ற செய்திகளை உங்கள் இன்பாக்ஸிற்கு வெளியே வைக்கும். விரைவான தேடல், தேடலைப் பயன்படுத்தி, எப்பொழுது அனுப்பியது அல்லது பெற்றது என்ற கவலையின்றி உங்களுக்கு தேவையான செய்தியைக் கண்டறியலாம்.
ஜிமெயில் ஒரு அற்புதமான மின்னஞ்சல் சேவை என்பது இதைப்பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். பயன் படுத்தாதவர்கள் கூட இது பற்றி பல விஷயங்கள் தெரிந்து வைத்து இருப்பார்கள்.
இதில் கூறப்படும் சேவைகள்/வசதிகள் சில நீங்கள் தற்போது பயன்படுத்தும் மின்னஞ்சலில் (Yahoo , Hotmail , Rediff) இருக்கலாம். இருப்பினும் இது போல அனைத்து வசதிகளும் நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சலில் இருக்காது என்பதை உறுதியாகக் கூற முடியும். இதில் உள்ள முக்கிய பயன்கள்.
வேகம் (SPEED)
எப்போதுமே நாம் பயன்படுத்தும் மென்பொருளா கட்டும், கணினியாகட்டும், வேகமாக இருந்தால் தான் நமக்கும் பயன்படுத்த விருப்பம் இருக்கும். இல்லை என்றால் ஒன்றை க்ளிக் செய்து விட்டு அது திறப்பதற்க்காக காத்துக்கொண்டு இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனை ஜிமெயிலில் கிடையாது. தேவையற்ற விஷயங்களை நீக்கி, மல்டிமீடியா சம்மந்தப்பட்ட விஷயங்களை குறைத்து, எவ்வளவு விரைவாக திறக்க முடியுமோ அந்தளவு துள்ளியமாக உதவி செய்கிறது. ஜிமெயில் அஜக்ஸ் (Ajax) என்ற தொழில்நுட்ப முறையை சிறப்பாக பயன்படுத்துகிறது. எனவே அதனுடைய வேகம் மற்ற மின்னஞ்சல்களை விட அதிவேகத்தில் உள்ளது. புது மின்னஞ்சல் வந்தாலோ, Reply செய்தாலோ, Forward செய்தாலோ தாமதம் செய்யாமல் அடுத்த நொடியே நடக்கும். மற்ற மின்னஞ்சல்களில் சில நொடிகளுக்கு பிறகே எதுவும் நடக்கும்.
எளிமை (SIMPLICITY)
கூகுள் என்றாலே எளிமை தான். இதை கூகுள் தளத்தின் முகப்புப் பகுதியில் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இதையே தான் தன்னுடைய ஜிமெயில் சேவைக்கும் பின்பற்றுகிறது. அனைத்தையும் நீக்கி தேவைப்படும் நேரங்களில் மட்டும் அந்த வசதி நமக்கு தெரியும்படி மாற்றி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக இடது புறம் Inbox, sent mail, Compose mail மட்டுமே இருக்கும் மற்றவை தேவை என்றால் அங்கே நமது மவுசை கொண்டு சென்றால் போதும் அவை தெரியும்படி அமைத்து இருப்பார்கள். அது போல Delete, Forward spamஎன்று எதுவும் முகப்பில் இருக்காது. நீங்கள் ஒரு மின்னஞ்சலை தேர்வு செய்தால் மட்டுமே அவை தெரியும். காரணம் தேர்வு செய்யாமல் நாம் Delete, forward அல்லது வேறு லேபிள் செய்ய முடியாது. அப்புறம் எதற்கு அவை தெரிய வேண்டும். பல முறை யோசித்து செய்த ஏற்பாடு அனைவரையும் மலைக்கவைக்கிறது.
ஸ்பாம் (Spam)
மிகப்பெரிய பிரச்சனை இது தான். நமக்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் இருந்து எல்லாம் மின்னஞ்சல் வரும். லாட்டரி பரிசு சீட்டு விழுந்ததாக, உங்கள் வங்கி விவரங்களைக் கேட்டு, வயாகரா மாத்திரை வாங்கக்கூறி, ஆபாச மின்னஞ்சல்கள் என்று வந்து குவியும். இவை ஜிமெயிலில் கிடையாது. அல்லது மிகக் குறைவான அளவு வருகிறது. மிகத் திறமையான தொழில்நுட்ப முறையில் இவற்றை வடிகட்டி விடும். இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. விஷயம் தெரிந்தவர்கள் ஓரளவு சமாளிக்கலாம். ஒன்றுமே தெரியாதவர்கள் ஸ்பாம் விஷயத்தில் ஏமாற அதிக வாய்ப்புள்ளது. இதைவிட முக்கியமான ஒன்று. நம் அனுமதி இல்லாமலே நாம் அனுப்பவது போல வயாகரா விளம்பரங்கள் நம்முடைய உடிவேயஉவல் உள்ளவர்களுக்கு சென்று விடும். இதை சந்திக்காத நபர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக யாஹூ வில் இருந்து அதிகம் வரும்.
போல்டர் / லேபிள் (Folder/Label)
யாஹூல் இருந்த போல்டர் வசதி ரொம்ப உபயோகமாக இருந்தது. மின்னஞ்சல்களை பிரிக்க எளிதாக இருந்தது. ஜிமெயிலில் போல்டர் வசதி இல்லை. ஆனால் அதற்கு இணையாக லேபிள் வசதி உள்ளது. இதுவும் போல்டர் போலத் தான். ஆனால் வேறு மாதிரி. ஜிமெயில் பயன்படுத்திய பிறகு தான் இது எவ்வளவு எளிமை, இதனால் எப்படி எளிதாக அனைத்தையும் பிரிக்க முடியும் என்று புரியும்.
தேடல் (Search)
கூகுள் என்றால் தேடல் தான் பிரபலம். தனது ஜிமெயிலிலும் இதை உட்புகுத்தியுள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான மின்னஞ்சல்களை நொடியில் கண்டறிய முடியும். அட்வான்ஸ் தேடுதல் முறையில் தேடுதலை இன்னும் எளிமை ஆக்குகிறது. கூகுள்க்கு பிடிக்காத ஒரே வார்த்தை சிரமம். சங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியும். நாம் சில நேரங்களில் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை தவறுதலாக மற்றொருவருக்கு அனுப்பி விடுவோம். SEND பட்டனை அழுத்திய பிறகே உணர்வோம் ஆனால் மின்னஞ்சல் சென்று விடும். அதே போல அவசரமாக தட்டச்சு செய்யும் போது சில விஷயங்களை மறந்து அனுப்பி இருப்போம். இதைத் தடுக்க நீங்கள் 30 நொடி வரை இதை ஜிமெயிலில் தாமதிக்க வைக்கலாம். அதாவது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியும் 30 நொடி வரை செல்லாமல் இருக்கும். உங்களுக்கு காத்திருக்க தேவையில்லை என்றால் Inbox அல்லது வேறு எதை க்ளிக் செய்தாலும் உடனே சென்று விடும். இதன் மூலம் தர்மசங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியும்.
குழும மின்னஞ்சல்கள் (மெயில் லூப்)
ஜிமெயிலில் உள்ள ஒரு அற்புதமான வசதி. இது ஒன்றிக்காகவே இதைப் பயன்படுத்துபவர்கள் பலர். இதன் வசதி என்னவென்றால் குழும மின்னஞ்சல்கள் ஒரே தலைப்பில் வரும் போது தனித்தனியாக இல்லாமல், ஒரே மின்னஞ்சலிலேயே ஒன்று இரண்டு என்று சேர்ந்து கொண்டு இருக்கும். இதன் மூலம் எடுத்துக்காட்டாக பத்து பேர் இந்தத் தலைப்பில் அனுப்பி இருந்தால், ஒரே பக்கத்தில் ஒரே முறையில் படிக்க முடியும். நமக்கு வரிசையாக படிக்க எளிதாக இருக்கும். ஒவ்வொன்றாக திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதனால் உங்கள் மின்னஞ்சல் எண்ணிக்கையின் அளவு குறைவாகத் தெரியும். இதே யாஹூ, ஹாட்மெயில் என்றால் குழும மின்னஞ்சல்களில் இருந்து மின்னஞ்சல்கள் வந்து குப்பை மாதிரி சேர்ந்து குவிந்து விடும்.
ஜிமெயில் மீட்டர்
இந்த வசதி தற்போது தான் கொண்டு வந்துள்ளார்கள். இதன் மூலம் நாம் மாதாமாதாம் என்ன செய்து இருக்கிறோம் என்ற அறிக்கையை தானியங்கியாகப் பெற முடியும். அதாவது எத்தனை மின்னஞ்சல் வந்துள்ளது, யாருக்கு அதிகம் அனுப்பி இருக்கிறோம், யார் உங்களுக்கு அதிகம் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்கள், எந்த நேரத்தில் மின்னஞ்சல் பயன்பாடு அதிகம் உள்ளது என்று விவரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் கிராப் (Graph) முறையிலும் தகவல்கள் தரப்படும். எனவே புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். நாம் விரும்பினால் வருடத்திற்கு ஒரு முறை கூட விவரங்கள் பெற முடியும். எடுத்துக்காட்டாக 2005 ல் இருந்து எவ்வளவு மின்னஞ்சல்கள் வந்துள்ளன என்று மேற்கூறிய முறையில் பார்க்க முடியும். ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கே பலருக்கு இந்த வசதி இருப்பது தெரியாது.
பாதுகாப்பு
எல்லாவற்றையும் விட முக்கியமானது பாதுகாப்பு. நீங்கள் எதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இதை உங்களால் மறுக்க முடியாது. பாதுகாப்பில் நம்மை தயார் படுத்துவதில் ஜிமெயில்க்கு நிகர் எந்த மின்னஞ்சல் நிறுவனமும் இருக்க முடியாது. நீங்கள் வழக்கமாக ஒரு இடத்தில் லாகின் செய்கிறீர்கள் என்றால் உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து பயன்படுத்திக்கொண்டு இருந்தால் நம்மை உஷார் படுத்தும். வேறு IP-யில் இருந்து லாகின் செய்து இருக்கிறார்கள் என்று.
இன்டர்நெட் சென்டர் செல்கிறீர்கள். Login லாகின் செய்து விட்டு மறந்து லாஃகவுட் Logout செய்யாமல் வந்து விடுகிறீர்கள். உடனே வேறு இடத்தில் லாகின் செய்து மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள அமர்வுகளை (session) நீங்கள் லாஃகவுட் செய்து விடலாம். திரும்ப அங்கேயே சென்று இதைச் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. அதே போல Account Activity யில் சென்று எந்தெந்த IP யில் இருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் உடனடியாக நமது கடவுச்சொல்லை Password மாற்றி விடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் கணக்கு திறந்து இருந்தால் நமக்கு எச்சரிக்கைப்படுத்தும். நாட்டின் பெயருடன் இருப்பதால் நம்மால் எளிதாக அறிய முடியும்.
இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!
2 step verification என்ற வசதி இருக்கிறது. இது தான் முதன்மை வசதி ஆகும். இது என்ன வசதி என்றால் வழக்கமாக நாம் எல்லோரும் கடவுச்சொல் (Password) கொடுத்து உள்ளே செல்வோம். இந்த வசதியை செயல்படுத்தி விட்டால் அதன் பிறகு நமக்கு ஒரு SMS வரும் அதை இதில் கொடுத்த பிறகு தான் நுழைய முடியும். இதன் மூலம் உங்கள் (Password) கடவுச்சொல்லை தெரிந்து கொண்டாலும், உங்கள் SMS பார்க்க முடியவில்லை என்றால் யாரும் ஹேக் செய்ய முடியாது. உதாரணத்திற்கு உங்கள் வங்கிக்கணக்கில் நுழைய சில வங்கிகள் SMS மூலம் code அனுப்புவார்கள் அதே முறை தான் இதற்கும்.
ஹேக் என்பது ஒரு திறமையான செயல். உங்கள் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தம் இல்லை. உங்களை யாரும் ஹேக் செய்ய முயற்சிக்கவில்லை என்று அர்த்தம். இந்த இரட்டை அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஹேக் செய்பவர்கள் இருப்பார்கள். விக்கி லீக்ஸ் அசாங்கே பற்றி எல்லாம் தெரிந்து இருப்பீர்கள். கடுமையான பாதுகாப்பு களைக் கொண்ட பல இடங்களையே ஆட்டிப்படைத்தவர்கள். எப்படி இருந்தாலும் ஹேக் செய்து விடுவார்கள் என்று அசட்டையாக இருப்பதை விட இது போல பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்வது நமக்கு நல்லது. ஹேக் வாய்ப்புகளை குறைக்கும்.
மின்னஞ்சலில் கூடுதல் வசதி
நீங்கள் ஒரு மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போது உங்களுடைய ஐேடெஒ செல்ல வேண்டும் என்றால் அதாவது வேறு மின்னஞ்சலை சரி பார்க்க வேண்டும் என்றால் இதை னுசயகவ ல் போட்டு விட்டு தான் போக முடியும், ஒரே சமயத்தில் செய்ய முடியாது. இதற்கு கூகிள் தரும் புதிய வசதி தான் Fast Window. நீங்கள் புதிய மின்னஞ்சல் தட்டச்சு செய்யும் போதே உங்கள் Inbox செல்ல விரும்பினால் நீங்கள் கம்போஸ் செய்யும் ஜன்னலில் வலது பக்கம் இரு சிறு பெட்டி இருக்கும் அதை க்ளிக் செய்தால் உங்களுடைய தற்போதைய ஜன்னல் (compose window) தனியாகவும் உங்கள் மின்னஞ்சல் முகப்பு பக்கம் அதாவது Inbox பகுதி முழுமையாகவும் வந்து விடும், பிறகு உங்களுக்கு தேவையான தகவல்களை அங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்.
கூகுள்ப்ரோபைல் (Google Profile)
கூகுள் தன்னுடைய பயனாளர்கள் ப்ரோபைலை மேம்படுத்தியுள்ளது. நம் விருப்பப்படி எளிதாக மாற்றிக்கொள்ள வசதி ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு பழைய வடிவமைப்பை விட இது அழகாகவும் உள்ளது.
பழைய மின்னஞ்சல்களை ஜிமெயில்க்கு கொண்டு வருவது?
இது மிக மிக அடிப்படையானது. ஏனென்றால் அனைத்தையும் மாற்றுவது என்பது ஒரு அலுவலகத்தை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு மாற்றுவதற்கு நிகரானது. முகவரி, தொலைபேசி எண், பொருட்கள், கணினி, நெட்வொர்க் என்று அனைத்தையும் மாற்றம் செய்வது போல சிரமமான பணி.
ஜிமெயில் இதற்காகவே ஒரு வசதி தந்துள்ளது. உங்களுடைய தற்போதைய மின்னஞ்சல் முழுவதையும் ஒன்று விடாமல் உங்கள் புதிய ஜிமெயில் கணக்கில் இம்போர்ட் செய்ய முடியும், அதாவது எந்த வித மாற்றமுமில்லாமல் தேதி, நேரம், உட்பட. மிக மிக எளிதானது. இதை தொடங்கி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். உங்களின் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். முடிந்தவுடன் உங்களுக்கு தானியங்கியாக அறிவிப்பு வரும். இதில் மின்னஞ்சல் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் முகவரிகளையும் இதுபோல செய்து விடலாம். உங்கள் மின்னஞ்சல்கள் ஒரு லேபிளில் வகைப்படுத்தப்படும் எடுத்துக்காட்டு contact@gmail.com இதன் மூலம் நீங்கள் பழைய முகவரி மின்னஞ்சல்களை எளிதாக இனம் காண முடியும்.
பழைய மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவித்து உபயோகிக்க தொடங்குவது:
உங்களுடைய புதிய மின்னஞ்சல் கணக்கில் இருந்து உங்கள் contact ல் உள்ள அனைவருக்கும் நான் இந்த புதிய முகவரிக்கு மாறி விட்டேன். எனவே உங்கள் contact ல் இந்த முகவரியை அப்டேட் செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுங்கள்.
ஜிமெயில்க்கு மாறினாலும் தொடர்ந்து பழைய மின்னஞ்சலுக்கே அனுப்புவார்களே?
இது நடைமுறை பிரச்சனை தான். நீங்கள் ஜிமெயில்க்கு மாறிய பிறகு Auto Reply / Vacation response Enable செய்து விடலாம். அதிக பட்சம் ஒரு மாதம் உங்கள் பழைய மின்னஞ்சல் கணக்கில் பதில் அளிக்கலாம். அது கூட இனி இதற்கு அனுப்பாதீர்கள்! என்னுடைய புதிய ஜிமெயில் ஐடிக்கு அனுப்பி விடுங்கள், என்று கூறி விடுங்கள். அப்புறமும் ஒரு சிலர் தங்கள் contact அப்டேட் செய்யாமல் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். அதற்கு பதில் தராதீர்கள். பின் அவர்களே அதற்கு அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள். நீங்கள் பதில் அனுப்பிக்கொண்டு இருந்தால், இதிலேயே தான் வந்து கொண்டு இருக்கும். எப்படி உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் நீங்கள் அறிவித்தும் உங்கள் பழைய எண்ணையே தொடர்பு கொள்வார்கள். அது போலத் தான். எனவே இந்தத் தவறை செய்யாதீர்கள். இதோடு மிக முக்கியமான விஷயம் பல்வேறு இடங்களில் (வங்கி, மொபைல் நிறுவனம்) உங்களுடைய பழைய மின்னஞ்சல் முகவரியே இருக்கும். இங்கே சென்று உங்கள் புது முகவரியை மறக்காமல் அப்டேட் செய்ய வேண்டும்.
மேற்கூறியவை எல்லாம் மிக முக்கியமான வசதிகள் மட்டுமே. இவை அல்லாமல் ஏராளமான வசதிகளை ஜிமெயில் தருகிறது. வாரம் ஒரு புது வசதி வந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு சிறப்புள்ள ஜிமெயிலை பயன்படுத்தி புதிய வசதிகளை, தொழில்நுட்பங்களை அனுபவியுங்கள். இது ஜிமெயில் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமல்ல பயன் படுத்துகிறவர்களுக்குக் கூட, காரணம் பலர் இதன் அருமை தெரியாமலே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிறப்பான மின்னஞ்சலை பயன்படுத்திக்கொண்டு இருக் கிறோம் என்று தெரிந்து பயன்படுத்துங்கள். பணம் கொடுத் தால் கூட இவ்வளவு வசதி தருவார்களா என்பது சந்தேகம் தான்.
யூ டியூப் (YouTube)
இணையத்தை பயன்படுத்துபவர்களில் யூடியூப் (YouTube) பற்றி தெரியாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு. தற்போது தினமும் ஒரு பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த தளம் துவங்கப்பட்டது ஏப்ரல் 23, 2005அன்று. இந்த வீடியோ உடன், இது வரை பல கோடி பேர் இதை பார்த்துள்ளனர். அதன் பிறகு 2005 அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக துவங்கப்பட்டது. இதன் பிறகு 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்ததளத்தை கூகிள் கையகப்படுத்தியது. தற்போது கூகிளின் மார்க்கெட் தந்திரத்தால் பணம் கொழிக்கும் ஒரு தளமாக உள்ளது.
யூடியூப் இல்லாத இணையத்தை நினைத்து பார்க்கவே முடியாது, என்ற நிலையில் இதன் பயன்பாடு நிறைந்துள்ளது. உலகளவில் பாண்ட் விட்த்தை (Band Width) ஐ அதிகம் எடுத்துகொள்ளும் ஒரு தளமாகவும், அதிகளவில் பயனாளர் களால் பயன் படுத்தப்படும் தளமாகவும் புகழ்பரப்பி வருகிறது.
யூடியூப்-ல் உள்ள காணொளிகளை தரவிறக்கம் (Download) செய்ய எளிதான இலவசமான மென்பொருள் YouTube Downloader உங்களுக்கு பிடித்த காணொளியை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், அந்த காணொளியின் முகவரியை காப்பி செய்து இந்த மென்பொருள் முகவரி இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே கொடுத்தால் போதுமானது. இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த ஃபார்மட்டில் (AVI, WMV, MP3, MP4, 3GP) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இருக்கும் என்றால் அதில் குறிப்பிடத்தக்க இடம் யூடியூப்க்கு நிச்சயம் உண்டு. கூகிள் இதை கையகப்படுத்தியதில் இருந்து இதை சிறப்பாக கையாண்டு வருகிறது. இதன் மூலம் விளம்பரத்தில் பெருமளவு சம்பாதித்துக்கொண்டுள்ளது, உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு சூடான செய்தி என்றாலும் உடனே இதில் பயனாளர் களால் ஏற்றப்படும். இதில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். சமீபத்தில் ஐபிஎல் கிரிகெட் (IPL Criket)போட்டிகளை கூகிள் தனது தளத்தில் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
கூகிள் என்றாலே அது மாற்றம் தான். அதற்கேற்ப தற்போது தன் வடிவமைப்பிலும் தரத்திலும் சில மாற்றங்களை செய்துள்ளது, சரியாக கவனித்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள். அனுமதி இல்லாத வீடியோக்களை ஏற்றுவது தொடர்ந்தால் அந்த யூடியூப்-ஐ முடக்கி விடுகிறார்கள். இது முன்பே இருந்தாலும், தற்போது இதை கண்டறிவதில் தொழில் நுட்பத்தை அதிகம் பயன் படுத்துகிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு வீடியோ ஃபைல் ஏற்றப்பட்ட பிறகு அது பப்ளிஷ் ஆக நீண்ட நேரம் எடுக்கும். தற்போது நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. வீடியோ சப்ஸ்க்ரைப் செய்யவும், வீடியோ பற்றிய தகவலை படிக்கவும், (முன்பு இது வலது பக்கம் மேலே இருந்தது. தற்போது வீடியோ அடியி லேயே கொடுக்கப்பட்டுள்ளது) வசதி ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஓட்டு போட 5 நட்ஷட்திரங்கள் இருந்தது. தற்போது இது விரல் போன்று (Thump Style) அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய முறையை விட ஓட்டளிக்க எளிதாக உள்ளது.
எபிசோடிக் (www.episodic.com)
கூகிள் சமீபத்தில் எபிசோடிக் (www.episodic.com) என்ற வீடியோ தளத்தை கையகப்படுத்தியுள்ளது. தற்போது அதன் வீச்சு என்னவென்பதை நாம் அறிவோம். இணையத்தில் வீடியோவிற்கு இருக்கும் சிறப்பான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூகுள் இந்த தளத்தையும் வாங்கியுள்ளது.
முன்பு ஒவ்வொரு படமாக தேர்வு செய்து அப்லோடு செய்ய வேண்டும். (Easy Up loader இல்லாமல்) தற்போது எத்தனை படங்களை வேண்டும் என்றாலும் மொத்தமாக தேர்வு செய்து இணைக்கலாம். இது ரொம்ப எளிதாக உள்ளது.
கூகுள் டிரைவ்(Google Drive)
கூகுள் தனது அடுத்த முயற்சியாக கூகுள் டிரைவ் (Google Drive)வசதியை ஆரம்பித்துள்ளது. இணையத்தில் உலவிக்கொண்டுள்ள முக்கிய செய்தியே கூகுள் டிரைவ்தான்.
தற்போது இணையம் அனைவரிடையே மிக வேகமாக பிரபலமாகி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்போதுமே ஒரு விஷயம் பிரபலம் ஆகிறது என்றால் அதனோடு தொடர்புடைய விஷயங்களும் வளர்ச்சியடைந்து வரும். எடுத்துக்காட்டாக அனிமேசன் 3D கிராபிக்ஸ் மற்றும் சினிமாத்துறை என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. இவை எல்லாம் வரும் என்று கருப்பு வெள்ளை காலங்களில் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
இது போல இணையத்திலும் கணக்கில் அடங்கா தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இன்றைய புதிய வசதி ஒரு வருடத்தில் பழையதாகி விடுகிறது. அந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில்நுட்பம் தான்
கிளவுட் கம்ப்யூட்டிங்.
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்பது நமது தகவல்களை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அதை நாம் எந்த இடத்தில் இருந்தும் இணையம் அல்லது வழக்கமான நமது நெட்வொர்க் மூலம் பயன்படுத்தும் ஒரு வசதியாகும். இதன் மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டும் என்றாலும் நாம் தகவல்களை பெற முடியும்.
எவ்வாறு நமது மின்னஞ்சலை எங்கே இருந்து வேண்டும் என்றாலும் நம்மால் எந்த வித சிக்கலும் இல்லாமல் நமது தகவல்கள் யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயில் போன்ற வழங்கிகளில்(server) பயன்படுத்த முடியுமோ அதேவாறு.
கொஞ்சம் பெரிய அளவில் அதாவது உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் இது போன்ற இடத்தில் இருந்தால்! இது தான் மேககணினி (கிளவுட் கம்ப்யூட்டிங்). உங்கள் தகவல்கள் அனைத்தும் எடுத்துக் காட்டாக கூகுள் வழங்கியில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் இருந்தால் போதும். உங்கள் தகவல்களைப் பெற முடியும். அதாவது உங்கள் வீட்டில் இருக்கும்போது தான் இதை பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இல்லை. எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் கோப்பை (file) அப்டேட் செய்ய முடியும்.
உங்களில் ஒரு சிலர் சில முக்கிய கோப்புகளை மின்னஞ் சல்களிலோ அல்லது வேறு தளங்களிலோ சேமித்து வைத்து இருப்பீர்கள். அவசரமாக தேவைப்படும் போது பயன்படுத்து வதற்காக. உதாரணத்திற்கு உங்கள் பிறப்பு சான்றிதழ் அவசரமாக தேவைப்படுகிறது. ஆனால் அதனுடைய கோப்பு (file) உங்கள் வீட்டு கணினியில் இருக்கிறது. ஆனால் வீட்டிற்கு சென்று எடுத்து வரும் அளவிற்கு நேரமில்லை அல்லது நீங்கள் தொலைவில் இருக்கிறீர்கள் என்ன செய்வது? இதை நீங்கள் கூகுள் பிகாசாவிலோ அல்லது வேறு இடத்திலோ சேமித்து வைத்து இருந்தால் உடனடியாக உங்களால் அருகில் உள்ள ஏதாவது ஒரு பிரவுசிங் சென்டர் சென்று பிரிண்ட் செய்து பயன்படுத்த முடியும். எவ்வளவு நேரம் மிச்சம்! அதோடு வேலையும் விரைவாக முடியும்.
முன்பு இணையத்தின் வேகத்தின் அளவு மிக மிக மெதுவாக இருந்தது. ஆனால் தற்போது இதன் வேகம் அதிகரித்து இருக்கிறது. எனவே இது போன்ற வசதிகள் உருவாகி வருகின்றன.
ட்ராப்பாக்ஸ் (Dropbox)
ட்ராப்பாக்ஸ் என்பது ஒரு தளம். இதில் இலவசமாக நமக்கு 2 GB இடம் தருகிறார்கள். மற்றும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் சில MB களை பெற முடியும். பணம் கட்டினால் மேலும் நமக்கு தேவையான அளவு இட வசதியைப் பெற முடியும்.
இது எப்படி வேலை செய்கிறது என்றால் இவர்கள் தரும் ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் (வீட்டுக்கணினி அலுவலக கணினி என்று எங்கு தேவையோ அங்கு) இதை நிறுவியவுடன் உங்களுடைய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டால் உங்களது கணினியில் ட்ராப்பாக்ஸ் (Dropbox) என்ற பெயரில் ஒரு ஃபோல்டர் வந்து விடும். இதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவு வரை சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு கணினியில் JPG கோப்பை சேமிக்கிறீர்கள். பின் அலுவலகம் வந்து உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் நீங்கள் வீட்டுக் கணினியில் சேமித்த கோப்பு இங்கேயும் வந்து விடும். இணையம் அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
இணையம் இல்லாமலும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும். ஆனால் அப்டேட் செய்தால் இங்கே மட்டுமே அப்டேட் ஆகும். மற்ற இடங்களில் ஆகாது காரணம் இணைய இணைப்பு இல்லாதது.
அதே போல நீங்கள் ஒரு TEXT கோப்பை அடிக்கிறீர்கள் அதை வேறு கணினியில் அப்டேட் செய்தால் உங்கள் வீடு அலுவலகம் என்று அனைத்து இடத்திலும் அப்டேட் ஆகி விடும். காரணம் உண்மையாக அந்த கோப்பு இருக்கும் இடம் வழங்கி ஆகும். நீங்கள் இதைப் பயன்படுத்த கண்டிப்பாக இணையம் அவசியமாகும். iPhone, Android என்று தொலைபேசிகளிலும் இந்த வசதி உள்ளது. எனவே இணையம் இருந்தால் எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் தகவல்களை பார்க்க முடியும்.
இதை விண்டோஸ், மேக்ஸ், லினஸ்(Windows, Mac, Linux) மற்றும் கைபேசி (Mobile)-ல் பயன்படுத்தலாம். உங்கள் ஹார்ட்டிஸ்க் செயலிழந்து விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் தகவல்கள் மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்கும், இதுவும் இந்த சேவையின் மிக முக்கிய பயன்.
மைக்ரோசாப்ட் கூட இது போல தருகிறது. ஆனால் இது போல மென்பொருள் வைத்தல்ல. சென்ற வருடம் iOS5 மூலம் Cloud Storage வந்த ஆப்பிள் நிறுவனம் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனாளர்களைப் பெற்று இந்த தொழில் நுட்பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. அதிலும் கடைசி 15 மில்லியன் பயனாளர்களை 21 நாட்களில் பெற்று இருக்கிறது.
இந்த Dropbox வசதியைத் தான் கூகுள் தரப்போகிறது. கூகுள் ஏற்கனவே தனது Google Docs என்ற வசதி மூலம் இதை தருகிறது. ஆனால் Dropboxபோன்று இதற்கு என்று தனியாக மென்பொருள் வைத்து அல்ல. தற்போது இதற்கு வரவேற்பு அதிகமாவதை உணர்ந்து இந்த வசதியைத் தர திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இலவசமாக 1 GB கொடுக்கிறார்கள். நமக்கு அதிக அளவில் இடம் வேண்டும் என்றால் பணம் கட்டி இதில் பெற்றுக்கொள்ளலாம். இனி வரும் காலங்களில் நமது கணினிகளில் ஹார்ட் டிஸ்க் இயங்கு தளத்திற்கு (OS) மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது. நம் தகவல்கள் எல்லாம் ஊடடிரன Cloud Computing முறையில் வந்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு இது போல வர சில வருடங்கள் ஆகும். காரணம் இணைய வேகம் தான். தென் கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகள் இதில் முதலில் வர வாய்ப்பு உள்ளது. அதோடு நமது நாட்டில் இன்னும், இணையம் செலவு மிக்கதாகவே உள்ளது. அளவில்லாத (Unlimited) வசதி இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இல்லை என்றால் மிகுந்த செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கும். ஊடடிரன ஊடிஅயீரவைபே என்பது மிகப்பெரிய விஷயம் அதில் ஏகப்பட்ட தகவல்கள் விஷயங்கள் அடங்கி உள்ளது.

கூகிள் மின்னஞ்சலில் கவனிக்கப்படவேண்டியவை!

இழுத்தலும் இணைத்தலும் (Attachment Drag and Drop)
மின்னஞ்சலில் புயலைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் ஜிமெயிலின் அடுத்த வசதி இது. இனி நீங்கள் உங்கள் ஃபைல் மற்றும் படங்களை எளிதாக னுசயப யனே னுசடியீ செய்து இணைக்கலாம். பழைய முறையும் அப்படியே உள்ளது. உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அந்த முறையில் நீங்கள் உங்கள் இணைப்பை மேற்கொள்ளலாம். கூகுள்ப்ரோபைல் (Google Profile)
கூகுள் தன்னுடைய பயனாளர்கள் ப்ரோபைலை மேம்படுத்தியுள்ளது. நம் விருப்பப்படி எளிதாக மாற்றிக்கொள்ள வசதி ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு பழைய வடிவமைப்பை விட இது அழகாகவும் உள்ளது.
பழைய மின்னஞ்சல்களை ஜிமெயில்க்கு கொண்டு வருவது?
இது மிக மிக அடிப்படையானது. ஏனென்றால் அனைத்தையும் மாற்றுவது என்பது ஒரு அலுவலகத்தை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு மாற்றுவதற்கு நிகரானது. முகவரி, தொலைபேசி எண், பொருட்கள், கணினி, நெட்வொர்க் என்று அனைத்தையும் மாற்றம் செய்வது போல சிரமமான பணி.
ஜிமெயில் இதற்காகவே ஒரு வசதி தந்துள்ளது. உங்களுடைய தற்போதைய மின்னஞ்சல் முழுவதையும் ஒன்று விடாமல் உங்கள் புதிய ஜிமெயில் கணக்கில் இம்போர்ட் செய்ய முடியும், அதாவது எந்த வித மாற்றமுமில்லாமல் தேதி, நேரம், உட்பட. மிக மிக எளிதானது. இதை தொடங்கி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். உங்களின் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். முடிந்தவுடன் உங்களுக்கு தானியங்கியாக அறிவிப்பு வரும். இதில் மின்னஞ்சல் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் முகவரிகளையும் இதுபோல செய்து விடலாம். உங்கள் மின்னஞ்சல்கள் ஒரு லேபிளில் வகைப்படுத்தப்படும் எடுத்துக்காட்டு contact@gmail.com இதன் மூலம் நீங்கள் பழைய முகவரி மின்னஞ்சல்களை எளிதாக இனம் காண முடியும்.
உங்களுடைய புதிய மின்னஞ்சல் கணக்கில் இருந்து உங்கள் contact ல் உள்ள அனைவருக்கும் நான் இந்த புதிய முகவரிக்கு மாறி விட்டேன். எனவே உங்கள் contact ல் இந்த முகவரியை அப்டேட் செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுங்கள்.
ஜிமெயில்க்கு மாறினாலும் தொடர்ந்து பழைய மின்னஞ்சலுக்கே அனுப்புவார்களே?
இது நடைமுறை பிரச்சனை தான். நீங்கள் ஜிமெயில்க்கு மாறிய பிறகு Auto Reply / Vacation response Enable செய்து விடலாம். அதிக பட்சம் ஒரு மாதம் உங்கள் பழைய மின்னஞ்சல் கணக்கில் பதில் அளிக்கலாம். அது கூட இனி இதற்கு அனுப்பாதீர்கள்! என்னுடைய புதிய ஜிமெயில் ஐடிக்கு அனுப்பி விடுங்கள், என்று கூறி விடுங்கள். அப்புறமும் ஒரு சிலர் தங்கள் contact அப்டேட் செய்யாமல் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். அதற்கு பதில் தராதீர்கள். பின் அவர்களே அதற்கு அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள். நீங்கள் பதில் அனுப்பிக்கொண்டு இருந்தால், இதிலேயே தான் வந்து கொண்டு இருக்கும். எப்படி உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் நீங்கள் அறிவித்தும் உங்கள் பழைய எண்ணையே தொடர்பு கொள்வார்கள். அது போலத் தான். எனவே இந்தத் தவறை செய்யாதீர்கள். இதோடு மிக முக்கியமான விஷயம் பல்வேறு இடங்களில் (வங்கி, மொபைல் நிறுவனம்) உங்களுடைய பழைய மின்னஞ்சல் முகவரியே இருக்கும். இங்கே சென்று உங்கள் புது முகவரியை மறக்காமல் அப்டேட் செய்ய வேண்டும்.
மேற்கூறியவை எல்லாம் மிக முக்கியமான வசதிகள் மட்டுமே. இவை அல்லாமல் ஏராளமான வசதிகளை ஜிமெயில் தருகிறது. வாரம் ஒரு புது வசதி வந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு சிறப்புள்ள ஜிமெயிலை பயன்படுத்தி புதிய வசதிகளை, தொழில்நுட்பங்களை அனுபவியுங்கள். இது ஜிமெயில் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமல்ல பயன் படுத்துகிறவர்களுக்குக் கூட, காரணம் பலர் இதன் அருமை தெரியாமலே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிறப்பான மின்னஞ்சலை பயன்படுத்திக்கொண்டு இருக் கிறோம் என்று தெரிந்து பயன்படுத்துங்கள். பணம் கொடுத் தால் கூட இவ்வளவு வசதி தருவார்களா என்பது சந்தேகம் தான்.
யூ டியூப் (YouTube)
இணையத்தை பயன்படுத்துபவர்களில் யூடியூப் (YouTube) பற்றி தெரியாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு. தற்போது தினமும் ஒரு பில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்த தளம் துவங்கப்பட்டது ஏப்ரல் 23, 2005அன்று. இந்த வீடியோ உடன், இது வரை பல கோடி பேர் இதை பார்த்துள்ளனர். அதன் பிறகு 2005 அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக துவங்கப்பட்டது. இதன் பிறகு 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்ததளத்தை கூகிள் கையகப்படுத்தியது. தற்போது கூகிளின் மார்க்கெட் தந்திரத்தால் பணம் கொழிக்கும் ஒரு தளமாக உள்ளது.
யூடியூப் இல்லாத இணையத்தை நினைத்து பார்க்கவே முடியாது, என்ற நிலையில் இதன் பயன்பாடு நிறைந்துள்ளது. உலகளவில் பாண்ட் விட்த்தை (Band Width) ஐ அதிகம் எடுத்துகொள்ளும் ஒரு தளமாகவும், அதிகளவில் பயனாளர் களால் பயன் படுத்தப்படும் தளமாகவும் புகழ்பரப்பி வருகிறது.
யூடியூப்-ல் உள்ள காணொளிகளை தரவிறக்கம் (Download) செய்ய எளிதான இலவசமான மென்பொருள் YouTube Downloader உங்களுக்கு பிடித்த காணொளியை தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், அந்த காணொளியின் முகவரியை காப்பி செய்து இந்த மென்பொருள் முகவரி இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே கொடுத்தால் போதுமானது. இதை நீங்கள் உங்களுக்கு பிடித்த ஃபார்மட்டில் (AVI, WMV, MP3, MP4, 3GP) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இருக்கும் என்றால் அதில் குறிப்பிடத்தக்க இடம் யூடியூப்க்கு நிச்சயம் உண்டு. கூகிள் இதை கையகப்படுத்தியதில் இருந்து இதை சிறப்பாக கையாண்டு வருகிறது. இதன் மூலம் விளம்பரத்தில் பெருமளவு சம்பாதித்துக்கொண்டுள்ளது, உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு சூடான செய்தி என்றாலும் உடனே இதில் பயனாளர் களால் ஏற்றப்படும். இதில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். சமீபத்தில் ஐபிஎல் கிரிகெட் (IPL Criket)போட்டிகளை கூகிள் தனது தளத்தில் வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
கூகிள் என்றாலே அது மாற்றம் தான். அதற்கேற்ப தற்போது தன் வடிவமைப்பிலும் தரத்திலும் சில மாற்றங்களை செய்துள்ளது, சரியாக கவனித்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள். அனுமதி இல்லாத வீடியோக்களை ஏற்றுவது தொடர்ந்தால் அந்த யூடியூப்-ஐ முடக்கி விடுகிறார்கள். இது முன்பே இருந்தாலும், தற்போது இதை கண்டறிவதில் தொழில் நுட்பத்தை அதிகம் பயன் படுத்துகிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு வீடியோ ஃபைல் ஏற்றப்பட்ட பிறகு அது பப்ளிஷ் ஆக நீண்ட நேரம் எடுக்கும். தற்போது நேரம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. வீடியோ சப்ஸ்க்ரைப் செய்யவும், வீடியோ பற்றிய தகவலை படிக்கவும், (முன்பு இது வலது பக்கம் மேலே இருந்தது. தற்போது வீடியோ அடியி லேயே கொடுக்கப்பட்டுள்ளது) வசதி ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஓட்டு போட 5 நட்ஷட்திரங்கள் இருந்தது. தற்போது இது விரல் போன்று (Thump Style) அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய முறையை விட ஓட்டளிக்க எளிதாக உள்ளது.
எபிசோடிக் (www.episodic.com)
கூகிள் சமீபத்தில் எபிசோடிக் (www.episodic.com) என்ற வீடியோ தளத்தை கையகப்படுத்தியுள்ளது. தற்போது அதன் வீச்சு என்னவென்பதை நாம் அறிவோம். இணையத்தில் வீடியோவிற்கு இருக்கும் சிறப்பான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூகுள் இந்த தளத்தையும் வாங்கியுள்ளது.
பிகாசோ (Picasa)
கூகுள் பிகாசோவில் நமது படங்களை சேமிக்கலாம் என்பதும் அதனுடைய இலவச அதிகபட்ச அளவு 1GB என்பதும் அனைவரும் அறிந்தது. இதில் காணொளிகளையும்(Video) இணைக்கலாம் என்பதை சிலர் அறிந்து இருப்பார்கள். பலருக்கு இது தெரியாது. தற்போது கூடுதல் சேவையாக கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் வசதி என்னவென்றால் நீங்கள் 800 பிக்சல் அளவுடைய (அல்லது அதற்குக் குறைவாக) படங்களை எவ்வளவு வேண்டு மென்றாலும் சேமிக்கலாம். இது 1 GB கணக்கில் வராது அதே போல காணொளிகளை 15 நிமிடம் மற்றும் அதற்கு குறைவாக ஓடக்கூடிய அளவில் சேமித்தாலும் இந்த இலவசக்கணக்கில் வராது.முன்பு ஒவ்வொரு படமாக தேர்வு செய்து அப்லோடு செய்ய வேண்டும். (Easy Up loader இல்லாமல்) தற்போது எத்தனை படங்களை வேண்டும் என்றாலும் மொத்தமாக தேர்வு செய்து இணைக்கலாம். இது ரொம்ப எளிதாக உள்ளது.
கூகுள் டிரைவ்(Google Drive)
கூகுள் தனது அடுத்த முயற்சியாக கூகுள் டிரைவ் (Google Drive)வசதியை ஆரம்பித்துள்ளது. இணையத்தில் உலவிக்கொண்டுள்ள முக்கிய செய்தியே கூகுள் டிரைவ்தான்.
தற்போது இணையம் அனைவரிடையே மிக வேகமாக பிரபலமாகி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்போதுமே ஒரு விஷயம் பிரபலம் ஆகிறது என்றால் அதனோடு தொடர்புடைய விஷயங்களும் வளர்ச்சியடைந்து வரும். எடுத்துக்காட்டாக அனிமேசன் 3D கிராபிக்ஸ் மற்றும் சினிமாத்துறை என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. இவை எல்லாம் வரும் என்று கருப்பு வெள்ளை காலங்களில் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
இது போல இணையத்திலும் கணக்கில் அடங்கா தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இன்றைய புதிய வசதி ஒரு வருடத்தில் பழையதாகி விடுகிறது. அந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில்நுட்பம் தான்
கிளவுட் கம்ப்யூட்டிங்.
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்பது நமது தகவல்களை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அதை நாம் எந்த இடத்தில் இருந்தும் இணையம் அல்லது வழக்கமான நமது நெட்வொர்க் மூலம் பயன்படுத்தும் ஒரு வசதியாகும். இதன் மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டும் என்றாலும் நாம் தகவல்களை பெற முடியும்.
எவ்வாறு நமது மின்னஞ்சலை எங்கே இருந்து வேண்டும் என்றாலும் நம்மால் எந்த வித சிக்கலும் இல்லாமல் நமது தகவல்கள் யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயில் போன்ற வழங்கிகளில்(server) பயன்படுத்த முடியுமோ அதேவாறு.
கொஞ்சம் பெரிய அளவில் அதாவது உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் இது போன்ற இடத்தில் இருந்தால்! இது தான் மேககணினி (கிளவுட் கம்ப்யூட்டிங்). உங்கள் தகவல்கள் அனைத்தும் எடுத்துக் காட்டாக கூகுள் வழங்கியில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் இருந்தால் போதும். உங்கள் தகவல்களைப் பெற முடியும். அதாவது உங்கள் வீட்டில் இருக்கும்போது தான் இதை பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இல்லை. எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் கோப்பை (file) அப்டேட் செய்ய முடியும்.
உங்களில் ஒரு சிலர் சில முக்கிய கோப்புகளை மின்னஞ் சல்களிலோ அல்லது வேறு தளங்களிலோ சேமித்து வைத்து இருப்பீர்கள். அவசரமாக தேவைப்படும் போது பயன்படுத்து வதற்காக. உதாரணத்திற்கு உங்கள் பிறப்பு சான்றிதழ் அவசரமாக தேவைப்படுகிறது. ஆனால் அதனுடைய கோப்பு (file) உங்கள் வீட்டு கணினியில் இருக்கிறது. ஆனால் வீட்டிற்கு சென்று எடுத்து வரும் அளவிற்கு நேரமில்லை அல்லது நீங்கள் தொலைவில் இருக்கிறீர்கள் என்ன செய்வது? இதை நீங்கள் கூகுள் பிகாசாவிலோ அல்லது வேறு இடத்திலோ சேமித்து வைத்து இருந்தால் உடனடியாக உங்களால் அருகில் உள்ள ஏதாவது ஒரு பிரவுசிங் சென்டர் சென்று பிரிண்ட் செய்து பயன்படுத்த முடியும். எவ்வளவு நேரம் மிச்சம்! அதோடு வேலையும் விரைவாக முடியும்.
முன்பு இணையத்தின் வேகத்தின் அளவு மிக மிக மெதுவாக இருந்தது. ஆனால் தற்போது இதன் வேகம் அதிகரித்து இருக்கிறது. எனவே இது போன்ற வசதிகள் உருவாகி வருகின்றன.
ட்ராப்பாக்ஸ் (Dropbox)
ட்ராப்பாக்ஸ் என்பது ஒரு தளம். இதில் இலவசமாக நமக்கு 2 GB இடம் தருகிறார்கள். மற்றும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் சில MB களை பெற முடியும். பணம் கட்டினால் மேலும் நமக்கு தேவையான அளவு இட வசதியைப் பெற முடியும்.
இது எப்படி வேலை செய்கிறது என்றால் இவர்கள் தரும் ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் (வீட்டுக்கணினி அலுவலக கணினி என்று எங்கு தேவையோ அங்கு) இதை நிறுவியவுடன் உங்களுடைய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டால் உங்களது கணினியில் ட்ராப்பாக்ஸ் (Dropbox) என்ற பெயரில் ஒரு ஃபோல்டர் வந்து விடும். இதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவு வரை சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு கணினியில் JPG கோப்பை சேமிக்கிறீர்கள். பின் அலுவலகம் வந்து உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் நீங்கள் வீட்டுக் கணினியில் சேமித்த கோப்பு இங்கேயும் வந்து விடும். இணையம் அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.
இணையம் இல்லாமலும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும். ஆனால் அப்டேட் செய்தால் இங்கே மட்டுமே அப்டேட் ஆகும். மற்ற இடங்களில் ஆகாது காரணம் இணைய இணைப்பு இல்லாதது.
அதே போல நீங்கள் ஒரு TEXT கோப்பை அடிக்கிறீர்கள் அதை வேறு கணினியில் அப்டேட் செய்தால் உங்கள் வீடு அலுவலகம் என்று அனைத்து இடத்திலும் அப்டேட் ஆகி விடும். காரணம் உண்மையாக அந்த கோப்பு இருக்கும் இடம் வழங்கி ஆகும். நீங்கள் இதைப் பயன்படுத்த கண்டிப்பாக இணையம் அவசியமாகும். iPhone, Android என்று தொலைபேசிகளிலும் இந்த வசதி உள்ளது. எனவே இணையம் இருந்தால் எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் தகவல்களை பார்க்க முடியும்.
இதை விண்டோஸ், மேக்ஸ், லினஸ்(Windows, Mac, Linux) மற்றும் கைபேசி (Mobile)-ல் பயன்படுத்தலாம். உங்கள் ஹார்ட்டிஸ்க் செயலிழந்து விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் தகவல்கள் மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்கும், இதுவும் இந்த சேவையின் மிக முக்கிய பயன்.
மைக்ரோசாப்ட் கூட இது போல தருகிறது. ஆனால் இது போல மென்பொருள் வைத்தல்ல. சென்ற வருடம் iOS5 மூலம் Cloud Storage வந்த ஆப்பிள் நிறுவனம் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனாளர்களைப் பெற்று இந்த தொழில் நுட்பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. அதிலும் கடைசி 15 மில்லியன் பயனாளர்களை 21 நாட்களில் பெற்று இருக்கிறது.
இந்த Dropbox வசதியைத் தான் கூகுள் தரப்போகிறது. கூகுள் ஏற்கனவே தனது Google Docs என்ற வசதி மூலம் இதை தருகிறது. ஆனால் Dropboxபோன்று இதற்கு என்று தனியாக மென்பொருள் வைத்து அல்ல. தற்போது இதற்கு வரவேற்பு அதிகமாவதை உணர்ந்து இந்த வசதியைத் தர திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இலவசமாக 1 GB கொடுக்கிறார்கள். நமக்கு அதிக அளவில் இடம் வேண்டும் என்றால் பணம் கட்டி இதில் பெற்றுக்கொள்ளலாம். இனி வரும் காலங்களில் நமது கணினிகளில் ஹார்ட் டிஸ்க் இயங்கு தளத்திற்கு (OS) மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது. நம் தகவல்கள் எல்லாம் ஊடடிரன Cloud Computing முறையில் வந்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு இது போல வர சில வருடங்கள் ஆகும். காரணம் இணைய வேகம் தான். தென் கொரியா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகள் இதில் முதலில் வர வாய்ப்பு உள்ளது. அதோடு நமது நாட்டில் இன்னும், இணையம் செலவு மிக்கதாகவே உள்ளது. அளவில்லாத (Unlimited) வசதி இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இல்லை என்றால் மிகுந்த செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கும். ஊடடிரன ஊடிஅயீரவைபே என்பது மிகப்பெரிய விஷயம் அதில் ஏகப்பட்ட தகவல்கள் விஷயங்கள் அடங்கி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக