Translate

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

கணணி உலகம் 1

கணணி அறிவை வளர்ப்போம்...


கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரத்தை; 
ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து,அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்;

தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.

விண்டோஸ் டாஸ்க் பாரில் கடிகாரத்தை நீக்க...

விண்டோஸ் டாஸ்க் பாரில் நாம் கேட்காமலேயே வந்து அமர்ந்து கொள்ளும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஸ்டார்ட் பட்டன். இது இல்லாமல் நாம் வேலை பார்க்க முடியாது. இன்னொன்று வலது ஓரத்தில் இயங்கும் கடிகாரம். கடிகாரத்தை நாம் நீக்க முடியும். பலர் இதைத் தேவை எனக் கருதினாலும் சிலர் “இது எதற்கு? நமக்குத் தான் கடிகாரம் வேறு வழிகளில் இருக்கிறதே“ என எண்ணுகின்றனர். இவர்களுக்காக கடிகாரத்தினை மறைக்கும் வழி இங்கே தரப்படுகிறது.



1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸால் வலது புறத்தைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் “Properties” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


2. இதில் Taskbar and Start Menu Properties என்ற பல டேப்கள் அடங்கிய மெனு கிடைக்கையில் அதில் “Taskbar” என்ற டேபைக் கிளிக் செய்திடவும்.


3. இதில் “Notification area” என்று ஒரு இடம் இருக்கும். இதில் என்று “Show the clock” உள்ள இடத்திற்கு எதிரே உள்ள கட்டத்தின் டிக் அடையாளத்தை மவுஸால் கிளிக் செய்து எடுத்துவிட்டுப் பின் ஓகே கிளிக் செய்து மூடவும். கடிகாரம் மீண்டும் வேண்டும் என்றால் பழையபடி அதே இடம் சென்று கட்டத்தில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

பூட்டுவதற்கு[ Lock செய்ய ] நாம் எமது கணணியின் முகப்புத்திரையில்[ Desktop ]ஒரு ShortCut ஒன்றை எவ்வாறு உருவாக்கிப் பயன்படுத்தலாம்


நாம் கணணியில் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவசரமான ஒரு வேளையில் அதாவது வேண்டப்படாத அவசரமான வேளைகளில் பிறரிடமிருந்து எமது ஆவணங்களை பாதுகாப்பதற்காக உடனே கணணியை பூட்டுவதற்கு[ Lock செய்ய ] நாம் எமது கணணியின் முகப்புத்திரையில்[ Desktop ]ஒரு ShortCut ஒன்றை எவ்வாறு உருவாக்கிப் பயன்படுத்தலாம் 

இதற்காக நீங்கள் கீழே உள்ள படிகளை செய்தால் போதும்.




முதலில் உங்கள் முகப்புத்திரையில் வைத்து Right Click செய்து புதிய ShortCutஒன்றை உருவாக்கவும்.

இப்போ ஒரு விண்டோ தோன்றும். இதிலே உள்ள இடைவெளியில்rundll32.exe user32.dll,LockWorkStation என்பதைக் கொடுத்து NEXT என்பதை அழுத்தவும்.

இப்போ தோன்றும் விண்டோவில் lock.exe என்று அல்லது உங்களுக்கு விரும்பிய பெயரை .exe என்பதுடன் சேர்த்துக் கொடுத்து Finish என்பதைக் கொடுங்கள்

இப்போ நீங்கள் உருவாக்கிய ShortCut ஆனது முகப்புத்திரையில் காணப்படும். இலகுவில் இனங்காண இதற்கு பொருத்தமான icon ஐ வழங்கவேண்டும். இதற்காக; உருவாக்கப்பட்ட ShortCut இன்மேல் Right Click செய்து Propertiesஎன்பதைத் தெரிவுசெய்து அதிலே ShortCut என்பதை கிளிக்செய்து Change Icon என்பதை தெரிவுசெய்யவும்.

இப்போ தோன்றும் விண்டோவில் Shell32.dll என்பதை காட்டிய இடத்தில் கொடுக்கும்போது கீழே உள்ள பகுதியில் File icon ஒன்று தோன்றும்.
அதனை கிளிக் செய்யும்போது பல Icons தோன்றும். இவற்றில் விரும்பியதை தெரிவுOK கொடுக்கவும்.

இப்போ கணணித்திரையை Lock செய்வதற்குரிய ShortCut ஐ உருவாக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அவசரமாக Lock செய்யவேண்டிய தேவையின்போது இதனை கிளிக் செய்யவேண்டியதுதான்.......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக