Translate

திங்கள், 12 மே, 2014

பேசும் ஆங்கிலம் [SPEAKING ENGLISH ]

My self -என்னைப் பற்றி 


1. Who are you? - நீங்கள் யார் ? 
     I am a boy.    - நான் ஒரு பையன் . 

2. What is your name? - உங்களுடைய பெயர் என்ன ? 
    My name is sasi.  - என்னுடைய பெயர் சசி.

3. How old are you?  - உங்களுடைய வயது என்ன ?
    I am 21years old.  - எனக்கு இருபத்தொரு வயசு.

4. Where do you live?  - நீங்கள் எங்கே வாசிக்கிறீர்கள் ?
    I live in karainagar.  - நான் காரைநகரில் வசிக்கிறேன்.

5. What is your address?  - உங்களது முகவரி என்ன ?

 6. Do you live in a town?  - நீங்கள் நகரிலா வசிக்கிறீர்கள் ?
    Yes.I live in town.  - ஆம்.நான் நகரில் வசிக்கிறேன். 

7. With whom do you live?  - நீங்கள் யாருடன் வசிக்கிறீர்கள் ?
    I live with my parents.  - நான் எனது பெற்றோர்களுடன் வசிக்கிறேன்.

8. Do you go to school?  - நீங்கள் பாடசாலை செல்கிறீர்களா ?
    Yes.I go to school.  -ஆம்.நான் பாடசாலை செல்கிறேன்.

9. What is your school?  - உங்களுடைய பாடசாலை எது ?
    My school is DR.T.M.M.V.  - எனது பாடசாலை  DR.T.M.M.V. 

10. When is your birthday?  - உங்களுடைய பிறந்த தினம் எப்போது ?
      My birthday is on 26 th of october.  - என்னுடைய பிறந்த தினம் அக்டோபர் 26.

11. Are you a christian?  - நீங்கள் கிறிஸ்தவரா ?
      I am a christian.  - நான் ஒரு கிறிஸ்தவர்.

12. Can you speak in english?  - நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா ?
      I can speak english little bit.  - நான் ஆங்கிலம் கொஞ்சம் பேசுவேன்.


My family -எனது குடும்பம்  

1. What is your father?  - உங்கள் தகப்பன் என்ன செய்கிறார் ?
     My father is a doctor.  - எனது தந்தை ஒரு வைத்தியர்.

2. What is your father name?  - உங்களது தகப்பனின் பெயர் என்ன ?
    My father name is paramsothy.  - என்னுடைய அப்பாவின் பெயர் பரம்சோதி.

3. Do you have brothers?  - உங்களுக்கு சகோதரர்கள் இருக்கிறார்களா ?
    Yes.I have 3 brothers.  - ஆம்.எனக்கு மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள்.

4. How many sisters you have?  - உங்களுக்கு எத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள் ?
    I have no sisters.  - எனக்கு சகோதரிகள் இல்லை.

At school -பாடசாலையில் 

1. Are you late?  - நீங்கள் நேரம் சென்று வந்தீர்களா ?
    No.I am not late.  - இல்லை.நான் நேரம் சென்று வரவில்லை.

2. How do you come to school?  - நீங்கள் பாடசாலைக்கு எவ்வாறு வருகிகறீர்கள் ? 
    I walk to school.  - நான் பாடசாலைக்கு நடந்து வருகிறேன்.

3. Who is your english teacher?  - உங்களுடைய ஆங்கில ஆசிரியர் யார் ?
    My english teacher is sharmi.  - என்னுடைய ஆங்கில ஆசிரியர் ஷர்மி அவர்கள்.

4. Doyou play cricket?  - நீங்கள் கிரிக்கட் விளையாடுவீர்களா ?
    Yes.I play cricket.  - ஆம்.நான் கிரிக்கட் விளையாடுவேன்.

5. Do you like reading? - உனக்கு வாசிக்க விருப்பமா ?
    Yes.I like reading.  - ஆம்.எனக்கு வாசிக்க விருப்பம்.

At home -வீட்டில் 

1. Do you like this frock?  - நீர் இந்த சட்டையை விரும்புகிறீரா ?
    I don't like it.  - எனக்கு அது விருப்பமில்லை.

2. Why don't like it?  - ஏன் உங்களுக்கு அது விருப்பமில்லை ?
    It is too small.  - அது மிகவும் சிறியது.

3. Where is the newspaper?  - பத்திரிகை எங்கே ?
    It is on the table.  - அது மேசையின் மேல்.

4.Why did you take my glass?  -நீர் ஏன் என்னுடைய கண்ணாடியை எடுத்தீர் ?
    Don't take it.  - அதை எடுக்க வேண்டாம்.
    Keep it here.  - அதை இங்கே வைக்கவும்.

5.Where is the case?  - உறை எங்கே ?
    It is in the drawer.  - அது இலாச்சியில் இருக்கிறது.

6. What are you doing?  - என்ன செய்கிறீர்கள் ?

7.Don't dirty the room.  - அறையை அசுத்தப்படுத்த வேண்டாம் ?
    I cleaned your room yesterday.  - நான் நேற்று உங்கள் அறையை சுத்தம் செய்தேன்.

8. What are you doing now?  -நீங்கள் இப்போ என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் ?
    I am playing with my friends.  - நான் எனது  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன். 

9. Your shirt is dirty.  - உங்களுடைய சட்டை அழுக்காயிருக்கிறது.
    It is coverd with dust.  - அது தூசியால் மூடப்பட்டுள்ளது.
    Go and have a wash.  - போய்க் கழுவிக் கொள்ளுங்கள்.

10. Be a good boy.  - நல்ல பிள்ளையாக இருங்கள்.

11.Don't run.  - ஓட வேண்டாம்.

12. You will fall.  - நீங்கள் விழுவீர்கள்.

13. Go slowly.  - மெதுவாகச் செல்லவும்.

14. Be careful.  - கவனம்.

15. I don't run.  - நான் ஓட மாட்டேன்.

16. I will walk slowly.  - நான் மெதுவாக நடப்பேன்.

17. It is raining?  - மழை பெயகின்றதா ?
      Yes.It is raining.  - ஆம்.மழை பெய்கின்றது.

18. I don't go out.  - நான் வெளியே போக மாட்டேன்.

19. Shall i tell you somthing?  - நான் உங்களுக்கு ஒரு விடயம் சொல்லவா ?

20. We will go on a trip.  - நாங்கள் ஒரு பயணம் போவோம்.

21. Where will you go?  - நீங்கள் எங்கே போகிறீர்கள் ?
      We will go to jaffna.  - நாங்கள் யாழ்ப்பாணம் போகிறோம்.

22.When will you go?  - எப்பொழுது போகிறீர்கள்.
      On the 15th of next month.  - எதிர்வரும் மாதம் 15ம் திகதி.

23. Wake up.  - எழும்புங்கள்.

24. Your are half an hour late.  - நீங்கள் அரை மணித்தியாலம் தாமதம்.
      No.thera is time.  - இல்லை.நேரம் இருக்கிறது.

25. What happend?  - என்ன நடந்தது ?

26. I fell.  - நான் விழுந்தேன்.

27. Are you hurt?  - உங்களுக்கு வலிக்குதா ?
      My leg hurts.  - என்னுடைய கால் வலிக்குது.

28. Why are you crying?  - நீங்கள் ஏன் அழுகிறீர்கள் ?
      Brother hit me.  - அண்ணன் என்னை அடித்தார்.

29. Why did you hit her?  - நீங்கள் ஏன் அவளை அடித்தீர்கள் ?
      He hit me first.  - அவர் தான் என்னை முதலில் அடித்தார்.

30. Don't cry.  - அழவேண்டாம்.
      I will punish him.  - நான் அவரை தண்டிப்பேன்.

31.What do you want to eat?  - உங்களுக்கு சாப்பிடுவதற்க்கு என்ன வேண்டும் ?
      I want an icecream.  - எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்.

32. Don't you like youghurt?  - உங்களுக்கு யோகர்ட் விருப்பமில்லையா ?
      No.I don't like.  - இல்லை.எனக்கு விருப்பமில்லை.

33. Here are 20 rupees.  - இந்தாங்கோ 20 ரூபா.

34. Go and buy two ice creams.  - போய் இரண்டு ஐஸ்கிரீம் வாங்குங்கள்.

35. Are you ready?  - நீங்கள் தயரா ?
      Not yet.  - இன்னும் இல்லை.
      Hurry up.  - அவசரப்படுத்துங்கள்.

36. Where are my shoes?  - என்னுடைய சப்பாத்து எங்கே ?
      It is in your room.  - அவை உன்னுடைய அறையில் இருக்கின்றன.

37. Now let's go.  - இப்பொழுது நாங்கள் போவோம்.

38. My dress is dirty.  - என்னுடைய ஆடைகள் அழுக்காய் இருக்கின்றன.

39. Open your book.  - உங்களுடைய புத்தகத்தை திறந்து கொள்ளுங்கள்.

40. What day is today?  - இன்று என்ன நாள் ?
      Today is wednesday.  - இன்று புதன்கிழமை.

  
    
    







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக