Translate

திங்கள், 28 ஜூலை, 2014

விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூட்டிங் திரையை மாற்ற

மென்பொருள் மூலம் பூட்டிங் திரையை மாற்ற


மேலே குறிப்பிட்ட முறையை செய்ய நேரம் போதவில்லை என்போருக்கு எளிதாக இலவச மென்பொருள் உதவியுடன் பூட்டிங் திரையை மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மென்பொருளை தரவிறக்கசுட்டி

VSLongonScreenCostomizer மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் VSLogonScreenCustomizer அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

அதில் Open Picture File என்னும் பொத்தானை அழுத்தி படத்தினை தேர்வு செய்யவும். பின் Apply எனும் பொத்தானை அழுத்தவும். User image has been set on logon screen successfully என்ற செய்தி வரும்.



தற்போது கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள், நீங்கள் தெரிவு செய்த  படம் பூட்டிங் திரையாக அமர்ந்திருக்கும்.
மென்பொருளை பயன்படுத்தி எளிதாக பூட்டிங் திரையை மாற்றிக் கொள்ள முடியும்...

இயங்குதளம் மூலமாக பூட்டிங் திரையை மாற்றுதல்

முதலில் வின்டோஸ் கீ மற்றும் R (Windows Key + R) பொத்தான்களை ஒரு சேர அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என்று உள்ளிட்டு ஒகே செய்யவும்.

அடுத்து தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background

பின் Background என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வலது புறம் OEMBackground என்பதை டபுள் கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்பதில் 1 என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தி ரிஸிஸ்டரி எடிட்டரை மூடி(Close) விடவும்.



அடுத்து C:\Windows\System32\oobe எனும் வரிசையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்யவும். நீங்கள் இயங்குதளத்தை எந்த ட்ரைவில் நிறுவியுள்ளீர்களோ அந்த ட்ரைவில் ஒப்பன் செய்யவும். இங்கு C: ட்ரைவில் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.

அடுத்து oobe எனும் கோப்பறையினுள் info எனும் கோப்பறையையும் அதனுள் backgrounds எனும் கோப்பறையையும் உருவாக்கவும்.


பெரும்பாலும் இக் கோப்பறைகள் உங்கள் இயங்குதளத்தில் காணப்படலாம் இல்லாதவர்கள் இதனை உருவாக்கி கொள்ளவும்.

அதனுள் அதாவது Background என்னும் கோப்பறைக்குள் நீங்கள் பூட்டிங் திரையில் வைக்க விரும்பும் படத்தை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். அந்த படத்திற்கு backgroundDefault.jpg என்று பெயரை மாற்றிக்கொள்ளவும். அந்த படமானது .jpg இருக்கும் பட்சத்தில் 256 KB அளவுக்குள் இருத்தல் அவசியம் ஆகும்.


ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள் நீங்கள் தெரிவு  செய்த  படம் பூட்டிங் திரையாக வந்திருக்கும்.......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக