Translate

வியாழன், 21 மே, 2015

சசியின் சரித்திரம்

அராலியில் பிறந்த போது - எனை 
அரவணைக்காத ஆளில்லை 
காரை நகருக்கு வந்தபோது எல்லாம் 
கதி கலங்க வைக்கிறது.

சிறிய வயதுதனில் பெரும் சிந்தையுடன் 
வாழ்ந்து வந்தேன் 
விரைந்தோடிய காலத்தினால் இப்போ 
வீதியில் கிடக்கின்றேன்.

தாய்ப்பால் குடித்தபோது தாயவள் அரவணைப்பு 
ஆண்டொன்று சென்றபோது அக்காளின் அரவணைப்பு .
ஆரம்பக் கல்வியினை ஆசையோடு கற்றுவந்தேன் 
அக்காவின் ஊக்குவிப்பால் அகிலமே சென்றுவந்தேன்.

பள்ளிப் பருவத்தில் - அக்கா 
பாடம் எல்லாம் புகட்டிடுவாள் 
பள்ளிப் பருவமே முடிந்தபின்பு - இன்று 
மௌனமாய் இருக்கின்றாள்.


சங்கீதம் கற்றுவந்தேன் - மனச் 
சங்கடம் போக்கவென்று - என் 
கீதம் சொல்கின்றேன் மிக 
இனிமையான  இராகத்தில்.

பதினொன்று வகுப்புடன் - என் 
படிப்பினை முடித்திருந்தால் 
பாரினில் நானின்று நல்ல 
பண்புடன் வாழ்ந்திருக்கேன்.

இடைவிடாத கல்வியினால் 
இன்றொரு பயனுமில்லை - ஏன் 
இந்தப் பிறப்பென்று என்னையே 
கேட்க்க வைக்கிறது.

எனக்குள்ளே ஒரு இலக்கு 
நிலையாய் இருந்தது 
காலத்தின் கோலமோ 
எல்லாம் குலைந்தது.

பட்டமொன்று வேண்டுமென்று - என்னை 
பள்ளிக்கனுப்பி வைத்தார்கள் 
பல்லன் என்ற பட்டத்தினை - நான் 
பள்ளியிலே பெற்றுவிட்டேன்.

உயர்தரம் கற்றபோது என்னை 
ஊக்குவித்த தோழர்கள் - இன்று 
உயர்ந்த இடம் சென்றதனால் 
என்னை ஒருபோதும் மதிக்கவில்லை.

காசுதான் வாழ்க்கை என்று 
கண்கலங்க வைக்கிறது.
கண்ணிமைக்கும் நேரமெல்லாம் 
கனவாய் வருகிறது.

அரவணைக்க ஆளிருந்தும் 
நாதியற்று திரிகின்றேன் 
வேலை ஒன்று இல்லாததால் - நான் 
வீதியில் திரிகின்றேன்.

பிறந்த பலனுக்காய் - நான் 
பிரிவை மறுக்கின்றேன் 
பிரிவென்று வந்துவிட்டால் 
நிரந்தரமாய் பிரிந்திடுவேன்.

வடு நிறைந்த வாழ்க்கை இது 
வலியாய் வலிக்கிறது 
வாழ்க்கையே சோகமென்று 
வரும் கனவு சொல்கிறது.

தரணியில் உதித்தவுடன் - என் 
தலை எழுத்தையும் குறித்துவிட்டான் 
அழித்துவிட நான் அலைந்தேன் - முடியவில்லை 
முடிவுரை கேட்க்கின்றான் 
முடித்திடவா என் வாழ்வை ??????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக