
இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது. Windows Live Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 25 Gb இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது.
இதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம்.


Profile என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளை எளிதில் செய்யலாம். Public, Private, Limited போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.
பயன்படுத்திப் பார்க்க வேண்டிய நல்ல சேவை.
இணையதளம் : http://skydrive.live.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக