Translate

திங்கள், 1 ஜூன், 2015

ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது எப்படி ?

அண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதற்கு :

ஆன்ட்ராய்ட்டில் தமிழில் எழுதுவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில. 

நான் பயன்படுத்துவது எழுத்தாணி, அதனையே உங்களுக்கும் சொல்லி தருகிறேன். நீங்கள் Play Store சென்று எழுத்தாணி என்னும் அப்ளிகேஷனை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். 



இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings > Language & Input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & Input Methods என்ற இடத்தில் (Ezhuthani) இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.



அதன் பின்னர் நீங்கள் எழுத துவங்கும் முன்பு திரையின் மேலே Swipe செய்து Choose Input Method என்று இருப்பதை Tap செய்யுங்கள்.



அதன் பின்னர் நீங்கள் நிறுவிய அப்ளிகேஷனை Tap செய்யுங்கள். அவ்வளவு தான் இனி தமிழில் உங்களால் எழுத முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக