ஹரி- பாடகர்
ஹரிஹரன் ஒரு திரைப்பட பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,বাংলা, மராத்தி ஆகிய மொழி படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009ல் மோதி விளையாடு என்ற தமிழ்ப்படத்திற்கு பின்னணி இசையும் அமைத்துள்ளது.
அறிமுகம்
இவர் 1992ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் செய்யபட்டார். இவர் ரோஜா என்ற திரைப்படத்தில் "தமிழா தமிழா நாளை" என்ற பாடல் பாடினார். இத்திரைப்படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுக படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக