Translate

சனி, 8 மார்ச், 2014

சங்கீதம்

கர்நாடக சங்கீதத்தின் தோற்றம்....













ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின. அப்பரும்சம்பந்தரும்சுந்தரரும்மணிவாசகரும்,பன்னீராழ்வார்களும்அருணகிரி நாதரும் பாடிய பல்லாயிரக்கணக்கான பக்தி இலக்கியங்களிலே தமிழிசையின் புகழ் இந்திய துணைக் கண்டத்தையும் தாண்டி எல்லை விரிந்து பரவியது. 12ஆம் நூற்றாண்டில் கி.பி. 1116 முதல் 1127 வரை மகாராட்டிர நாட்டினை சோமேஸ்வர புல்லோகமால் என்ற அரசன் ஆட்சிசெய்தான்.
இசையிலே மிகுந்த ஈடுபாடு கொண்ட அவன் 'மானச உல்லாசம்' என்ற நூலை எழுதியவன். தென்னிந்தியாவில் சிறப்புற்றோங்கிய செந்தமிழ் இசையால் கவரப்பட்ட அவன் அங்கிருந்து இசைவாணர்களை அழைப்பித்து அந்த இசையின்பத்திலே மூழ்கி இன்புற்றான். அக்காலத்தில் தென்னிந்தியா முழுமையையும் கருநாடகம் என்றே அழைத்தனர். அவனது நாட்டுக்குத் தெற்குத்திசையிலேயுள்ள தென்னிந்தியாவிலே வளர்ந்து பரவிநின்ற தமிழிசையை, அவனுக்குத் தென்திசையிலே அருகேயிருந்தது கர்நாடகம் என்பதாலும், கர்நாடகத்திலும், தெலுங்கு தேசத்திலும்கூட அக்காலத்தில் தமிழிசையே வழக்கத்தில் இருந்தமையாலும் அந்த இசைக்குக்கர்நாடக இசையென்று பெயரிட்டு அழைத்தான். அதனால் கர்நாடக இசையென்று அவன் அழைத்த பெயரோடு, தென்னாட்டு இசை வடநாட்டாருக்கு அறிமுகமானது. கர்நாடக சங்கீதம் என்று வடநாட்டில் விளங்கியது.
தமிழ்நாட்டு வரலாற்றில் கி.பி. 3 ம் நுாற்றாண்டு முதல் 6ம் நுாற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது. தொடர்ந்து 20 ம் நுாற்றாண்டு வரை தமிழகம் மாறிமாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அப்போதும் வடமொழி அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாக தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது. பல்லவர்கள் வடமொழிக்கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர். நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம். பிறகு மராட்டியர் காலகட்டம். இந்தக் காலகட்டங்களில் பொதுவாக தமிழ்க் கலைகளுக்கு இறக்கமும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன.
தியாகராஜர்சியாமா சாஸ்திரிகள்முத்துசாமி தீட்சிதர் என்போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றை மேடைகளில் பாடினார்கள். தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர்முத்துத் தாண்டவர்மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் வளர்த்த தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.  தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்தது. தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் கர்நாடக இசை தமிழிசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர். இதனால் பழந்தமிழிசை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.
மேலும் கருநாடக இசை பற்றிக் குறிப்பிடும்போது, தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், 'கருநாடக சங்கீதம்' எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர் என்று வெற்றிச்செல்வனென்ற இசை ஆய்வாளர் தம்முடைய இசையியல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக