Translate

புதன், 27 ஆகஸ்ட், 2014

இணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி?

நீங்கள் குறைந்த வேகம் உள்ள டயல் அப் அல்லது GPRS மூலம் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் உங்கள் இணைய உலாவி இணைய பக்கங்களில் உள்ள படங்களை தோன்ற செய்வதால் மிகவும் வேகம் குறைவாக இருக்கலாம். நீங்கள் கட்டுப்படுத்த பட்ட பாண்ட்விட்த் திட்டத்தை உபயோகிப்பவராக இருந்தால் பக்கங்களில் தேவை இன்றி படங்கள் தோன்றுவது உங்கள் பாண்ட்விட்த் விரைவில் காலி ஆகலாம். இணைய பக்கங்களில் படங்கள் தோன்றுவதை தடுப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.

இதை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எப்படி செய்வது?

1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் Tools மெனுவை கிளிக் செய்யுங்கள்.
2. Options தேர்வு செய்யுங்கள்
3. தோன்றுகின்ற டேப்களில் "Advanced" தேர்வு செய்யுங்கள்.
4. அதில் Mulitimedia என்ற பிரிவில் "Show Pictures" என்ற ஆப்சனை எடுத்து விடுங்கள்.
5. Ok கிளிக் செய்யுங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை மூடிவிட்டு திரும்ப ஓபன் செய்யுங்கள். இனிமேல் இணைய பக்கங்களில் படங்கள் தோன்றாது.



பயர்பாக்ஸில் (Firefox) எப்படி செய்வது?

1. பயர் பாக்ஸில் Tools மெனுவை கிளிக் செய்யுங்கள்.
2. Options தேர்வு செய்யுங்கள்
3. Load images automatically என்ற ஆப்சனை எடுத்து விடுங்கள்.
5. Ok கிளிக் செய்யுங்கள்.


மூடிவிட்டு திரும்ப ஓபன் செய்யுங்கள். இனிமேல் இணைய பக்கங்களில் படங்கள் தோன்றாது. 

கூகிள் குரோமில் இதனை செய்வது எப்படி?

கூகிள் குரோமில் இதனை செய்வது சற்றே நுணுக்கமான விஷயமாகும்.

1. Desktop -பில் உள்ள குரோம் ஐகானை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்
2. புதிய ஐகானை “Google Chrome - Disable Images” என்று Rename செய்து கொள்ளுங்கள்.



3. புதிய ஐகானில் வலது கிளிக் செய்து கொன்று "Properties" தேர்வு செய்து கொள்ளுங்கள்.
4. அதில் "Target" பகுதியின் இறுதியில் -disable-images என்பதனை சேர்த்து விடுங்கள்.
5. OK கிளிக் செய்யுங்கள்.


“Google Chrome - Disable Images” என்ற ஐகானை ஓபன் செய்தால் படங்கள் இல்லாமல் இணைய பக்கங்களை காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக