Translate

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

பேஸ்புக்கில் ஒரு Page உருவாக்குவது எப்படி?

1. முதலில் இந்த பக்கத்துக்கு செல்லுங்கள் – Create a Page
இதில் உங்கள் பேஜ் என்ன மாதிரியான ஒன்று என்று நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். எது என்று தெரியாவிடில் ஏதேனும் ஒன்றை ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டு தெரிவு செய்யுங்கள். பின்னர் மாற்றிக் கொள்ளலாம்.

2. ஒன்றை தெரிவு செய்த பின் அதற்கு தலைப்பு கொடுங்கள். அடுத்த பக்கத்தில் உங்கள் Page க்கு Profile Picture ஒன்றை Uplaod செய்யுங்கள். [இப்போது இல்லை என்றால் Skip கொடுத்து விடலாம்], அடுத்து About பகுதியில், இந்த பக்கம் குறித்த விவரமும், உங்கள் website முகவரியும் தரவும். 

3. அவ்வளவு தான் உங்கள் Page Ready ஆகி விட்டது. இப்போது முதல் ஆளாக நீங்கள் Like செய்து விடுங்கள். அடுத்து Invite Friends மூலம் உங்கள் நண்பர்களை இந்த Page- ஐ லைக் செய்யும்படி அழைக்கலாம். 

4. இனி போஸ்ட் செய்ய ஆரம்பிக்கலாம். 
5. Edit Page என்ற பக்கத்தில் சில வேலைகள் செய்ய முடியும், அவற்றை பற்றி பார்ப்போம், 
அதில் கிளிக் செய்து Manage Permissions என்பதை கிளிக் செய்யுங்கள். 
Manage Permissions:
Posting Ability – இதில் கீழே படத்தில் உள்ளது போல செய்து Save Changes என்று கொடுத்து விடுங்கள். 
இப்போது இடது பக்கம் மெனு போல உள்ளத்தில் Your Settings என்பதை கிளிக் செய்யவும். அதில்  “Send notifications to yourname@mail.com when people post to, comment on, or message your page.” என்பதை Unclick செய்து விடவும். 
Basic Information: 
இதில் நீங்கள் உங்கள் Page Category மாற்றம் செய்யலாம், பெயர் மாற்றம் என பல செய்யலாம். 
இதிலேயே User Name Change செய்யும் வசதியும் இருக்கும். அதில் சில வகையான Page – களுக்கு 25 Likes வந்த பிறகு தான் user Name Set செய்ய முடியும் என்று வரும். அப்படி வந்தால் அதற்கு பின் மாற்றம் செய்யவும். இதனால் உங்கள் page முகவரியை எளிதாக நண்பர்களுடன் பகிரலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக