Translate

ஞாயிறு, 23 நவம்பர், 2014

அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் இருந்து WI FI மூலமாக உங்களது கணனிகளை இணையத்துடன் இணைப்பதற்கு

நாம் ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்துகின்ற Mobile Data களைக் கொண்டு அதனை Wi Fi ஆக மாற்றி  எமது கணனிகளில் இணைய தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இதனை பயன்படுத்த எமக்கான Wi Fi கணக்கு ஒன்றினை நாம் வைத்திருக்க வேண்டும் இதனை எமது ஸ்மார்ட் தொலைபேசிகளில் இருந்து எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நான் இன்றைய பதிவில் கற்றுத்தருகின்றேன்..


* உங்களது தொலைபேசிகளில் Setting பகுதிக்கு சென்று அங்கு More Settings என்பதனை Tap செய்யவும்.


* அதனை தொடர்ந்து உங்களுக்கு Wireless and Networks பகுதி கிடைக்கும் அதில் Tethering and Portable Hotspot  என்னும் கட்டளையை Tap செய்யுங்கள்..




* அடுத்ததாக Portable Wi-Fi Hotspot பகுதியினை On செய்து கொள்ளுங்கள். அதன் மீது Tap செய்வதன் மூலம் அக்கட்டளைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்..



* அடுத்ததாக Portable Wi-Fi Hotspot பக்கத்தில் Android என்னுமிடத்தில் (இது எனது கணக்கு என்பதால் Ashraff Khan என உள்ளது) Allow all devices to connect என்னும் ரேடியோ பட்டனை தெரிவு செய்யுங்கள்.



* அதே பக்கத்தில் கீழே காணப்படுகின்ற Configure என்பதனை கிளிக் செய்து உங்கலுக்கான புதிய கணக்கு ஒன்றினை துவங்குங்கள்..




* புதிய கணக்கினை உருவாக்குவதற்கு Network SSID என்னுமிடத்தில் உங்களது பெயரினை வழங்குங்கள்.

* Security என்னுமிடத்தில் WPA2 PSK என்பதனை தெரிவு செய்யுங்கள் அப்போது தான் உங்கள் கணக்கிற்கு கடவுச்சொல் வழங்க முடியும்..

* எழுத்து, இலக்கம் அடங்கலாக உங்களது கடவு சொல்லை வழங்குங்கள் . பின்னர் அதனை சாவே செய்து கொள்ளுங்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக