Translate

வியாழன், 4 டிசம்பர், 2014

Start Menuஇல் தோன்றும் Recent Items களின் எண்ணிக்கையை மாற்ற.

இப்பதிவின் மூலம்  Start Menu இல் உள்ள Recent Items இல் தோன்றும் பட்டியலின் எண்ணிக்கையை எவ்வாறு Register Editor ஐப் பயன்படுத்தி மாற்றலாம் என்று பார்ப்போம்.
முதலில், “StratButton + R” ஐ அழுத்தி அல்லது Start இல் சென்று RUN என்பதை திறந்துகொள்ளுங்கள். இப்போ தோன்றும் RUN Window வில் “regedit” என்று type செய்து OK செய்யவும். இப்போ Registry Editor ஆனது திறக்கும். இதிலே கீழே காட்டப்பட்ட ஒழுங்கில் சென்று Explorer ஐ அடையவும்.
    


இதன் வலப்பக்கத்தில் வைத்து Right-Click செய்து New என்பதில் “ DWORD-(32bit) value “ என்பதை தெரிவுசெய்து அதன் Value name என்பதற்காக “MaxRecentDocs” என்று கொடுத்து; பின்னர் அதனை Double-Click செய்து திறந்துகொள்ளுங்கள்.




இப்போ தோன்றும் விண்டோவில் Value என்பதற்கு ஏதாவது நீங்கள் விரும்பும் இலக்கத்தையும் (உதாரணமாக 20), Base என்றபகுதியில் “Decimal” ஐயும் தெரிவுசெய்துOK செய்யவும்.


இப்போ உங்களுக்கு விரும்பிய எண்ணிக்கையில் Recent Items ஆனது காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக