Translate

வியாழன், 4 டிசம்பர், 2014

Start Window ஐ எமது விருப்புக்கு ஏற்ப மாற்றியமைக்க.

Windows Key  ஐக் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவே Start Window ஆகும். இதில் All Programs, Control Panel, Recent Programs, My Computer Shortcuts…… போன்றன காணப்படும். இவ் Start Window மூலம் நாம் அடையவேண்டிய பகுதியை விரைவில் சென்றடையலாம். அதாவது Shortcutsஆகும். இதிலே எவ்வாறு எமக்கு வேண்டியபடி மாற்றங்களைச் செய்யலாம் என்று இப்பதிவின் மூலம்  பார்ப்போம்.

முதலில் Windows Key அல்லது Strat Button ஐக் கிளிக்செய்யவும். இப்போ Start Window ஆனது தோன்றும். இதன் உள்ளே வைத்து Right-Click செய்து தோன்றும் Propertise ஐ கிளிக் பண்ணவும்.


இப்போ கீழ் உள்ளவாறு புதிய விண்டோ ஒன்று தோன்றும். இதிலே Customize என்பதை கிளிக் பண்ணவும்.



இப்போ கீழ் உள்ளவாறு புதிய விண்டோ ஒன்று தோன்றும்.


இதிலே Start Window இல் தோன்றவேண்டியவை காணப்படும். இதிலே சில எவ்வாறான நிலையில் தோன்றவேண்டும் எனவும் இன்னும் சில தோன்றவேண்டுமா அல்லது இல்லையா என்பதை நாம் தெரிவுசெய்யவும் வேண்டும். அதாவது My Computer என்பது மூன்று தெரிவுகளாக உள்ளது. இதில் முதல் தெரிவை கொடுத்தால் Start Window இல் கீழ் உள்ளவாறு காணப்படும்.


இரண்டாவது தெரிவிக் கொடுத்தால் Start Window இல் கீழ் உள்ளவாறு காணப்படும்.

 

RUN, Recent Items என்பவை Start Window இல் தோன்றவேண்டுமெனின் அவற்றை தெரிவு செய்யவும்.

அத்துடன் Recent Programs எத்தனை வேண்டும் என்று கொடுக்க உங்களுக்கு விரும்பிய எண்ணைக் கொடுக்கவும்.


இப்போ உங்கள் விருப்பப்படி Start Window ஆனது மாற்றமடைந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக