Translate

திங்கள், 28 ஜூலை, 2014

nokia phone இல் security code இனை reset செய்வது எப்படி

இன்று நாம் அதிகம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளில் ஒன்று தான், நாம் வழங்கிய Security Code ஐ மறந்துவிட்டு Reset செய்ய முடியாமல் தடுமாறுவது. ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் நான் உங்களுக்கு சொல்லி தர போகிறேன். இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும்.

01. உங்களுடைய Phone இன் Data Cable

02. NSS என்ற மென்பொருள்  இங்கு சென்று .தரவிறக்கி  நிறுவிக்கொள்ளுங்கள். 

03. Nokia PC Suite  உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால்  முதலில்இங்கு சென்று தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் 

உங்களது மொபைல் ஐ Data Cable மூலம் கணனியுடன் இணையுங்கள். உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள். Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

செய்முறை - 01 


NSS திறந்ததும் மேலே உள்ள படத்தினை போன்று காட்சியளிக்கும். அதிலே வலது பக்க மேல் மூலையில் உள்ள Search ஐகான் மீது கிளிக் செய்யவும்

செய்முறை - 02

Device Info தோன்றும் அதனை தொடர்ந்து, கடைசியாக உள்ள Tools Menu ஐ தெரிவு செய்துகொள்ளுங்கள்.

செய்முறை - 03 : 


Tools Menu வில் வலது புறம் உள்ள Start Up Self Tests என்பதன் கீழுள்ள Read பத்தானை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

செய்முறை - 04 :


Read பத்தானை கிளிக் செய்ததும், Test Description இடது பக்கத்தில் தோன்றும். வலது பக்கம் Testing பக்கம் தோன்றும் அதிலே Factory Setting என்பதனை தெரிவு செய்து கொள்ளுங்கள். மேலுள்ள படத்தினை கவனிக்க.

செய்முறை - 05 :


Factory Setting ஐ தெரிவு செய்ததும், தோன்றும் பக்கத்திலுள்ள Full Factory என்னும் ரேடியோ பத்தானை தெரிவு செய்து, Reset என்பதனை கிளிக் செய்யவும்.

செய்முறை - 06 : 

Reset ஐ தெரிவு செய்தவுடன் Reading Test... நடைபெறும் அதனை தொடர்ந்து உங்களுக்கு Reset Factory... Done. என்னும் செய்தி வரும்
அவ்வளவுதான்... இப்போது உங்களுடைய Phone இன் Security Code 12345 என்னும் நோக்கியா வழமையான Code இற்கு மாறிவிடும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக