விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP Operating system)இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (User Account) உருவாக்கி அதனை எவரும் அணுகாவண்ணம் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாப்பளிக்க முடியும் என்பது அறிந்த விடையம்.
அவ்வாறு நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வேர்ட் மறந்து போனால்?
பாஸ்வேர்ட் வைத்திருப்வருடன் தொடர்பில்லாத நிலையில் அவசரமாகக் கணினியை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டால்?
அல்லது வேண்டுமென்றே ஒருவர் உங்களுடைய கணினியின் பாஸ்வேர்ட்டை களவாடி, அதனை மாற்றி உங்களுக்கு சவாலாக அமைந்து
விட்டால்? என்ன செய்வது?
கமாண்ட் ப்ரொம்பில் NUSRMGR.CPL என ரைப் செய்து என்டர் கீயை அழுத்த பெனனிலுள்ள User Account விண்டோ திரையில் தோன்றும். இங்கு நீங்கள் விரும்பும் கணக்குக்குரிய பாஸ்வேர்ட்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.
ஒரு User Account இல் நுளையும் போது அதாவது லொக் ஒன் செய்யும் போது பாஸ்வேரட்டை வினாவாமல்ச் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்பில் control userpassword என ரைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அ்மினிஸ்ட் கணக்குக்குரிய பாஸ்வேர்ட்டை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியும் (Reset Password) ரீசெட் பாஸ்வேர்ட் பட்டனைக் கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்

வழக்கமாகப் பாஸ்வேர்ட் தேவைப்படும் போது, விசைப்பலகையில்(Key Board) ctrl+alt+Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தி கீழே காட்டப்பட்டுள்ள Logon Screen ஐப் பெற்று அதில் விண்டோஸில் நியமமாக(default) உருவாக்கப்படும் அட்மினிஸ்ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஒன் (Logon) செய்து உள்ளே நுழைந்து பயனர் கணக்குக்குப் பிறிதொரு புதிய பாஸ்வேர்ட்டை கொடுத்தோ அல்லது பாஸ்வேர்ட்டை செயலிழக்க (Disable) செய்தோ கணினியில் பயனர் கணக்கை மீளப்புதுப்பிக்கலாம்.
ஆனால், Windows ஐ முதன் முதலில் இன்ஸ்டோல் செய்யும் போது, அட்மினிஸ்டே்டர் (administrator) கணக்குக்கும் பாஸ்வேர்ட் கொடுக்கப்ப்டிருந்தால் அல்லது அந்த அட்மினிஸ்டேட்டர் (administrator) கணக்குக்குரிய பாஸ்வேர்ட்டும் மறந்துபோனால் என்ன செய்வது?.
அதற்க்கும் இருக்கிறது ஒரு தீர்வு. இந்த வழிமுறை கொஞ்சம் சிக்கலானது. ஆனாலும் விண்டோஸைப் புதிதாக நிறுவும் வழிமுறைகளுக்கு இது இலகுவானதாகும். முதலில் கணினியை இயக்கவும்(on). F11 அல்லது F12 (உங்களது கணினியின் Boot menu ஐத் தெரியவும்) விசைகளை அழுத்தவும். சீடியிலிருந்து Boot ஆகுமாறு (Boot from CD/DVD) பயோஸ் செட்டப்பில் (BIOS SETUP) மாற்றி விடுங்கள்.
விண்டொஸ் எக்ஸ்பி சீடியை ரைவில் வைத்ததுக்கொண்டு கணினி மறுபடியும் இயங்க ஆரம்பிக்கும் போது Press any key to boot from CD எனும் செய்தி திரையில்த் தோன்றும். அப்போது கீ போர்ட்டில் ஏதாவது ஒரு விசையை அழுத்த சீடியிலிருந்து கணினி Boot ஆக ஆரம்பிக்கும். இது விண்டொஸை நிறுவும் செயற்பாட்டின் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணினி பரிசோதித்து பைல்களை லோட் செய்ததும் Licensing Agreement திரையில்த் தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா சரி செய்வதா(Repair) என வினவும். அப்போது கீ போர்ட்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சீர்செய்வதற்க்கான விருப்பைத் தெருவிக்கவும்.
அடுத்து மறுபடியும் கணினி இயங்க ஆரம்பித்து (Restart) ஒரு சில நிமிடங்களில் Installing Devices என்னும் செயற்பாடு நடைபெறுவதைக் காணலாம். இந்த இடத்தில்த்தான் நீங்கள் உடனடியாகச் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீ போர்ட்டில் SHIFT+F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் (Command Prompt) விண்டோ தோன்றும்.
கமாண்ட் ப்ரொம்பில் NUSRMGR.CPL என ரைப் செய்து என்டர் கீயை அழுத்த பெனனிலுள்ள User Account விண்டோ திரையில் தோன்றும். இங்கு நீங்கள் விரும்பும் கணக்குக்குரிய பாஸ்வேர்ட்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.
ஒரு User Account இல் நுளையும் போது அதாவது லொக் ஒன் செய்யும் போது பாஸ்வேரட்டை வினாவாமல்ச் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்பில் control userpassword என ரைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அ்மினிஸ்ட் கணக்குக்குரிய பாஸ்வேர்ட்டை மாற்றவோ அல்லது நீக்கவோ முடியும் (Reset Password) ரீசெட் பாஸ்வேர்ட் பட்டனைக் கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக