Translate

திங்கள், 8 செப்டம்பர், 2014

நம் ஃபேஸ்புக் கணக்கின் அனைத்து தகவல்களையும் நமது கணிணியில் சேமிக்க எளிய வழி!

சோசியல் நெட்வொர்க் (social network )தளங்களில் அனைவரும் பயன்படுத்தும் மிகப்பிரம்மாண்டமான தளமாக இருக்கும் பேஸ்புக் (Facebook) , டிவிட்டர் (Twitter), கூகிள் பிளஸ் (google plus) போன்ற அனைத்து தளங்களிலும் நாம் உரையாடிய உரையாடல்கள் மற்றும் படங்கள் என அனைத்து தகவல்களையும் நம் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ள (backup) உதவ ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித் இங்கே பார்ப்போம்.
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக (Download) தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து மென்பொருளை இயக்கி நாம் நம்முடைய எந்த சோசியல் நெட்வொர்க் தளத்தில் இருந்து தகவல்களை எடுக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நம் User id மற்றும் Password ஐ கொடுத்து திறந்து கொள்ளவும்.

socilasafe

அதன் பின் எந்த மாதம் எந்த தேதியில் உள்ள தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தரவிரக்கம் செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு பார்த்தால் போதும்,Export all என்பதை Click செய்து அனைத்து தகவல்களையும் நம் கணினியில் சேமிக்கலாம், புதுமை விரும்பிகளுக்கும் பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் அனைவருக்குமே பயன் உள்ளதாக இருக்கும்.
like பெருவதற்காக பல  மணி நேரங்கள் செலவு செய்து நமது facebook கணக்கில் நாம் தகல்களை  போட்டிருப்போம். திடீர் என நமது கணக்கை facebook ஏதாவது ஒரு காரணத்திற்காக முடக்கவிடும். அது போன்று நேரங்களில் நமது அனைத்து  தகவல்களையும் நாம் இழக்க நேரிடும். இந்த மென்பொருளின் மூலம் அந்த கவலை இனி இல்லை. நாம் நமது கணிணியில் backup எடுத்து வைத்திருப்பதால் நமது தகல்களை எளிதில் மீட்டிக் கொண்டு மற்றோரு facebook கணக்கை துவங்கிக் அதில் அனைத்து தகவல்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும் நமக்கு சில நேரங்களில் facebook ல் ஒருவருடத்திற்கு முன்பு நாம் வெளியிட்ட தகல்கள் தேவைப்படும். ஆனால் அதை எடுப்பது மிகவும் கடினம். மவுசை உருட்டிக் கொண்டே செல்ல வேண்டும். இந்த மென்பொருளின் மூலம் அந்த கவலையும்   இனி இல்லை. நாம் எடுத்து வைத்துள்ள backup ல் இருந்து எளிதில் அந்த தகவலை பார்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக