Translate

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

பேஸ்புக்கில் நண்பர்களின் Game Request-ஐ Block செய்வது எப்படி?

இரண்டு வகையான தடுப்பு முறைகள் உள்ளது. 
அதில் முதல் முறையில் நண்பர்களின் பெயரை block செய்வதன் மூலம் தடுக்கும் முறை. 
அவற்றை எப்படி செய்வது என கீழே பார்ப்போம்.

STEP -1:
உங்களின் பேஸ்புக் பக்கத்தில் வலது மேல் மூலையில் இருக்கும் கீழ் நோக்கிய அம்புக்குறியை (அல்லது சக்கரம் போற icon-ஐ) கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் பக்கத்தில் settings என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
(காண்க படம் - 1) 

STEP - 2:
Settings என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் இருப்பது போல பக்கம் ஓபன் ஆகும். அதில் இடது பக்கம் உள்ள பட்டியலில் Blocking என இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
(காண்க படம் - 2) 



STEP - 3:
Blocking என்பதை கிளிக் செய்தால் Manage blocking என்ற பக்கம் ஓபன் ஆகும். அதில் Restricted List, Block users, Block app invites, Block event invitations, Block apps என வரிசையாக இருக்கும்.அவற்றில் Block app invites என்பதில் காட்டப்படுகிற கட்டத்தில் games request தருகிறவர்களின் பேஸ்புக் பெயரை டைப் செய்ய வேண்டும்.
(காண்க படம் - 3) 


பெயரை டைப் செய்து அவரை தேர்வு செய்தபின் கீழே படத்தில் உள்ளவாறு காட்டும்.
அவர் games request தருவதை நிறுத்தி விட்டால் அவரை unblock செய்து விடலாம்.
(காண்க படம் - 4) 
இந்த முறை மூலம் games request தருகிற நண்பர்களின் பெயரை கொடுத்து அவர்களிடமிருந்து வரும் games அழைப்பை முற்றிலும் தடுத்து நிறுத்தலாம்.

இரண்டாவது முறை:
மேலே கொடுக்கப்பட்ட வழிமுறையில் Step - 2 வரை செய்து கொள்ளுங்கள். 

STEP - 3:
Blocking என்பதை கிளிக் செய்தால் Manage blocking என்ற பக்கம் ஓபன் ஆகும். அதில் Restricted List, Block users, Block app invites, Block event invitations, Block apps என வரிசையாக இருக்கும். 
அவற்றில் Block apps என்பதில் கட்டப்படுகிற கட்டத்தில் நீங்கள் block செய்ய விரும்பும் game பெயரை டைப் செய்து தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் அந்த game request உங்களுக்கு வராது.
(காண்க படம் - 5) 


நான் Scribd, Criminal Case, Candy crush saga என மூன்று விளையாட்டுகளை block செய்துள்ளேன். இது போல உங்களுக்கு தொல்லையாக உள்ள game request-ஐ தடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக