Android App களை நமது போனில் தான் நாம் பயன்படுத்தி இருக்கின்றோம். சில நேரங்களில் ஆன்ட்ராய் போனில் கேம் விளையாடும் போது இந்த கேமை கணிணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என நாம் நினைத்தித்திருப்போம். அதற்குரிய வழிமுறையை தெரிந்து கொள்வதற்கு தான் இந்த பதிவு.
ஆம், whatsapp , angry bird , temple run, போன்ற அனைத்து Android App களையும் இனி உங்கள் கணிணியிலேயே இன்ஸ்டால் செய்து இயக்கிக் கொல்லாம். போனை போன்று சிரிய திரையில் இ்ல்லாமல் கணிணியின் அகண்ட திரையில்…
போனில் சிரிய திறையில் கேம் விளையாடி சலித்து விட்டவர்கள் இனி அதே கேமை கணிணியின் பெரிய திரையில் விளையாடிக் கொள்ளலாம்.
Android app களை கணிணியில் இன்ஸ்டால் செய்து எப்படி என்பதை பார்ப்போம்.
இதற்கு நம்மிடம் ஆண்ட்ராய் போன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இதற்கு சற்று நேரம் பிடிக்கும்.
3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும்.
4. இனி இது உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். இதில் உள்ள இது Google Play மூலம் உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள “Search Icon” மீது கிளிக் செய்து தேடி எடுத்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். நமது கணிணியின் இன்டர்நெட் இணைப்பை இது பயன்படு்த்திக் கொள்ளும்.
5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம்.
ஆன்ட்ராய்டு மென்பொருளான angry birds கணிணியில் இன்ஸ்டால் செய்த பிறகு எப்படி உள்ளது என பாருங்கள்:
நீங்கள் ஆன்ட்ராய் மென்பொருளுக்குரிய APK பைல்களை தனியாக டவுன்லோடு செய்தாலும் அதை மற்ற கணிணி மென்பொருளை இன்ஸ்டால் செய்வது போன்று double click செய்து எளிதில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்
உங்களிடம் Android Phone இருந்தால் அதை இந்த மென்பொருளுடன் இணைத்துக் கொள்ளலாம். உங்கள் ஆன்ட்ராய்டு போனில் இருக்கும் அனைத்து App களும் உங்கள் கணிணிக்கு தானாக வந்து விடும்.
இதை எவ்வாறு செய்வது என பார்ப்போம்
மென்பொளின் வலது கீழ் மூலையில் உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் “Cloud Connect” என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் “Do you have a Android Phone” என்பதற்கு Yes கொடுத்து Next கொடுங்கள்.
பிறகு வரும் பகுதியில் BlueStacks – கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு 9 இலக்க Pin Number ஒன்று கொடுக்கப்படும்.
இப்போது உங்களுக்கு BlueStacks- இல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கும். அடுத்து உங்கள் Android Phone – இல் நீங்கள் BlueStacks Cloud Connect என்ற Application – ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Application – ஐ இன்ஸ்டால் செய்து 9 இலக்க Pin Number – ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம்.
Log – in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App – களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும்.
இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App – களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம்.
பின் வரும் இணைப்பிற்கு சென்று BlueStacks மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக