Start > Run என்ற பட்டனை அழுத்தி msinfo32.exe என்று டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து Run பட்டனை கிளிக் செய்து இங்கு சொன்ன எழுத்துக்களை டைப் செய்யுங்கள்.
Run ல் மேலே சொன்ன எழுத்துக்களை டைப் செய்து எண்டரை அழுத்தியதும் இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதிலும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் இருக்கும்.
இந்த System டிஸ்பிளேயில் நீங்கள் முக்கியமான உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள
Processor Type மற்றும் Ram -ன் அளவை தெரிந்துகொள்ளலாம்.
அடுத்ததாக இதே தட்டில் தலைப்பில் Display என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். இதில் முக்கியமாக உங்கள் மதர்போர்டின் மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
கம்ப்யூட்டரில் மதர்போர்டு என்பது மிக முக்கியமான பகுதி. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விலை அதிகமான தரம் மிக்க உங்கள் மதர்போர்டை உங்களுக்கு தெரியாமல் ஒருவர் மாற்றிவிட்டு தரம் குறைந்த ஒரு போர்டை வைத்து உங்களிடம் தந்துவிடமுடியும். அதன் வித்தியாசம் உங்களுக்கு உடனே தெரியாது. அதனால் இந்த மாடல் நம்பரை வைத்துதான் நீங்கள் உங்கள் மதர்போர்டு சரியாகத்தான் உள்ளதா என தெரிந்துகொள்ள முடியும்.
அடுத்ததாக உங்கள் ஹார்டிஸ்க்.
உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு 320 GB, 250 GB, 160 GB, 100 GB, 80 GB, 40 GB, 20GB என்று பல அளவுகளில் இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி அதன் அளவு என்ன என்பதை பார்த்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதனை தெரிந்துகொள்ள உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer என்ற ஐக்கானை செலெக்ட் செய்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து கடைசியாக உள்ள Properties என்ற இடத்தை தொடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக