Translate

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இரண்டு Chrome Browser-களை Sync செய்வது எப்படி?

இரண்டு இடங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது நமக்கு ஒரு பிரச்சினை வருவது உண்டு. ஒன்றில் பயன்படுத்திய Bookmarks, History போன்றவற்றைஇன்னொன்றிலும் பயன்படுத்த முடியாது.  அலுவலகத்திலும், வீட்டிலும் Chrome ப்ரௌசரை பயன்படுத்தினால்  எப்படி இரண்டையும் Sync செய்வது என்று பார்ப்போம்.
முதலில் பயன் என்னவென்று சொல்லி விடுகிறேன். இதன் மூலம் ஒரு ப்ரௌசரில் உள்ள Bookmarks, History மற்றும் ப்ரௌசரில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் போன்றவை இரண்டாவது ப்ரௌசரிலும் Update ஆகும். 

இதற்கு நீங்கள் ஜிமெயில்  அக்கௌன்ட் வைத்திருக்க வேண்டும். 
முதலில் Chrome-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். Settings Icon மீது கிளிக் செய்து Sign in to Chrome என்பதை கிளிக் செய்யவும். 
இப்போது அடுத்த பக்கத்தில் உங்கள் ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி Sign-in செய்யவும். 
இப்போது வரும் பக்கத்தில் Sync Everything என்பதை கிளிக் செய்தால் Sync ஆகி விடும். குறிப்பிட்டவற்றை மட்டும் Sync செய்ய வேண்டும் என்றால் Advanced என்பதை கிளிக் செய்யவும். அதில் நீங்கள் வேண்டியவற்றை மட்டும் Sync செய்து கொள்ளலாம். 
இனி கூகுள்/ஜிமெயில் கணக்கில் log-in ஆகி இருந்தால் போதும் உங்கள் செயல்கள் அனைத்தும் இரண்டு Browser-களிலும் Update ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக