இன்றைய காலகட்டத்தின் தொலைத் தொடர்பாடல் வசதியின் அபரிமிதமான வளர்ச்சியின் பயனாக தோன்றியதே ஸ்கைப் எனப்படும் வீடியோ கான்பரன்ஸிங் ஒன்லைன் சேவை ஆகும்.
தனிப்பட்ட வகையிலும், வியாபார ரீதியாகவும் உலகில் பல் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இச்சேவைக்கென தனியான மென்பொருள் காணப்படுகின்றது.
இதனால் எம்முடன் இணைப்பில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் தொடர்புகளை இம்மென்பொருள் இயங்குநிலையில் காணப்பட்டால் மட்டுமே எம்மை வந்தடைகின்றன. இம்மென்பொருள் இயங்குவதற்கு முதன்மை நினைவகத்தில் கூடியளவு இடம் தேவைப்படும்.
எனினும் தற்போது இம்மென்பொருளிற்குப் பதிலாக முதன்மை நினைவகத்தில் குறைந்தளவு இடத்தைப் பிடிக்கக்கூடிய VoiceGear Contact Alerter மென்பொருளினைப் பயன்படுத்துவதன் ஊடாக எந்த நேரத்திலும் ஒன்லைனில் இருக்க முடிவதுடன் மற்றவர்களுடனான தொடர்பைப் பேண முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக