
இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு ஒட்டு மொத்தமாக கணினியில் நிறுவிடலாம்.
நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அடுத்து கீழே உள்ள 'Get Installer' என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றை நிறுவும் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
இப்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்க பட்டு உங்களிடம் எவ்வித கேள்வியும் கேட்காமல் கணினியில் நிறுவப்பட்டு விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக