Translate

வியாழன், 4 டிசம்பர், 2014

Facebook இன் Login பக்கத்தை படம் கொண்டு வடிவமைக்க.

Facebook இன் Login முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர்களா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்காக. இதற்காக நீங்கள் Google Chormeஉலாவியைப் பயன்படுத்த வேண்டும்.


முதலில் நீங்கள் Chorme உலாவியில் இருந்துகொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chorme உலாவியின் நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.



இப்போ உங்களுக்கு FaceBook இற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம்.



இப்போ உங்கள் படத்தை மாற்றுவதற்காக கீழ் உள்ள படத்தில் காட்டியதை கிளிக் செய்யவும்.


தோன்றும் விண்டோவில் காட்டப்பட்ட இடத்தில் உங்கள் படத்துக்கான URLஐக் கொடுக்கவும்.
முக்கிய குறிப்பு: நீங்கள் தெரிவுசெய்யும் படமானது கண்டிப்பாக ஏதும் இணையத்திலிருந்து இணைப்பு காட்டப்பட்டிருத்தல் வேண்டும்(URL). அதாவது உங்கள் கணணியில் இருந்து நேரடியாக பதிவேற்றம் செய்யமுடியாது. ( படங்களை இணையத்தில் பதிவேற்றுவதகாக இலவச தளங்களானphotobucket.com, imageshake.com போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.)



இப்போ உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் Facebook இன் Loginமுகப்புப்பக்கமானது மாறியிருப்பதைக் காணலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக