இது ஒரு இலவச மென்பொருள் தான். இதனை தரவிறக்கிக் கொள்ளஇங்குகிளிக் செய்யவும்.
மென்பொருளை தரவிறக்கி நிறுவியபின்னர் அதனை திறந்துகொள்ளவும். இப்போ கீழ் உள்ளவாறு காணப்படும்.
இதில் காட்டியவாறு Video என்பதில் “ All to 3GP “ என்பதை தெரிவு செய்யவும். இப்போ உங்களுக்கு கீழ் காட்டியவாறு ஓர் விண்டோ ஒன்று தோன்றும்.
இதிலே Add File என்பதைக் கிளிக் பண்ணவும். இப்போ தோன்றும் விண்டோ மூலமாக நீங்கள் தெரிவு செய்யவேண்டிய வீடியோவை திறந்துகொள்ளுங்கள். இப்போ கீழ் உள்ளவாறு நீங்கள் தெரிவுசெய்த வீடியோவானது உள்ளே காணப்படும்.
இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு Option என்பதை கிளிக் செய்வதன் மூலம் வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தெரிவுசெய்து அதன் கொள்ளளவைக் குறைக்கலாம். முழு வீடியோவையுமே குறைக்க வேண்டுமெனில் படத்தில் காட்டியவாறு OK ஐக் கொடுக்க வேண்டியதுதான். இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு Option என்பதை கிளிக் செய்யும்போது உங்களுக்கு கீழே காட்டியவாறு புதிய விண்டோ ஒன்று தோன்றும்.
இதிலே வீடியோவானது பார்க்கக் கூடியவாறு இருக்கும். வீடியோவை Playசெய்துவிட்டு உங்களுக்கு எப்பகுதி மட்டும் தேவையோ அப்பகுதியை மட்டும் தெரிவு செய்வதற்கு Start Time, End Time பொத்தான்களை கிளிக்செய்து ஆரம்ப முடிவு நேரங்களைத் தெரிவு செய்துகொள்ளவும். பின்னர் OK பண்ணவும். இப்போ கீழ் காட்டியவாறு காணப்படும்.
இதிலே நீங்கள் எங்கு சேமித்துக் கொள்ளப்போகின்றீர்களோ அவ்விடத்தை தெரிவுசெய்யவும். பின்னர் வலதுபக்க மேல் மூலையில் உள்ள OK ஐக் கொடுக்கவும்.
இப்போ மேல் உள்ளவாறு காணப்படும். இதிலே காட்டியவாறு Start என்பதை கிளிக் செய்யவேண்டியதுதான். நீங்கள் செய்த மாற்றம் சேமிக்கப்பட்டுவிடும்.
அவ்வளவுந்தான் உங்கள் வீடியோவின் கொள்ளளவானது குறைக்கப்பட்டுFacebook அல்லது YouTube இல் இலகுவாக Upload செய்யக்கூடியவாறு மாற்றப்பட்டுவிடும்.
இனியென்ன உங்கள் விருப்பப்படி வீடியோக்களை Facebook இல் பகிரவேண்டியதுதான்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக