Translate

வியாழன், 4 டிசம்பர், 2014

Facebook நண்பர்களின் பிறந்ததினங்களை மொபைலுக்கு இலவசமாக நினைவூட்டல்.

படிமுறை 01
முதலில் கூகிள் கலண்டரில் நுழைந்து கொள்ளுங்கள். இப்போ உங்களுக்கு கீழ் காட்டியவாறு வலது பக்க மேல் மூலையில் உள்ளவற்றில் ஏதாவதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். நான் இப்போ “Agenda”என்பதை தேர்ந்துள்ளேன்.



படிமுறை 02
இப்போ கீழ் காட்டியவாறு பச்சை வட்டத்தால் காட்டப்பட்டத்தில் கிளிக் செய்து நீட்டிக் கொள்ளவும். இப்போ மஞ்சள் வட்டத்தால் காட்டப்பட்டதை கிளிக் செய்யவும்.



படிமுறை 03
இப்போ கீழ் உள்ளவாறு பக்கம் தோன்றும். இதிலே, பச்சை வட்டத்தால் காட்டப்பட்டத்தை கிளிக் செய்யவும். இப்போ உங்களுக்கு புதிய விண்டோ தோன்றும். அதிலே Repeat Yearly என்பதை தெரிவுசெய்து தேவையான மாற்றத்தை செய்தபின் சேமித்துக் கொள்ளவும். பின்னர் சிவப்பு கட்டமிடப்பட்டத்தில் உள்ளதை கிளிக்செய்து உங்கள் ஞாபகமூட்டலானது E-mail க்கா அல்லது கைத்தொலைபேசிக்கா வரவேண்டுமென்பதைக் கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.

(உங்கள் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து கூகிள் கணக்குடன் இணைக்காவிடில் குறிக்கப்பட்ட அவ்விடத்தில் SMS என்ற சொல் காணப்படாது. Active செய்தபின்னர் மீண்டும் அதனைச் செய்யலாம். Activeசெய்வதை படிமுறை 06,07 இல் காட்டப்பட்டுள்ளது.)  



படிமுறை 04
இப்போ கீழ் உள்ள படத்தில் காட்டப்பட்டவாறு “Friend’s Birthdays” என்பதில் கிளிக் செய்து தோன்றும் நிரலில் உள்ள “Reminders and Notifications” என்பதை தெரிவுசெய்யவும்.



படிமுறை 05
இப்போ கீழ் உள்ளவாறு தோன்றும். இதிலே பச்சை வட்டமிடப்பட்ட பகுதியானது Active இல்லாமல் காணப்படும். முதலில், சிவப்பு கட்டமிடப்பட்ட பகுதியை கிளிக்செய்து தொலைபேசி இலக்கத்தை கூகிளுடன் இணைத்துக் கொள்ளவும். பின்னர் மீண்டும் இப்பகுதிக்கு சென்று பச்சை கட்டமிடப்பட்ட பகுதியிலுள்ள அனைத்தையும் தெரிவுசெய்து பக்கத்தை சேமித்துக்கொள்ளவும்.



படிமுறை 06
இப்போ உங்களுக்கு கீழ் காட்டியவாறு பக்கம் தோன்றும். அதிலே உங்கள் நாட்டின் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் கொடுத்து “Send Verification Code” என்பதைக் கிளிக்செய்யவும்.



படிமுறை 07
இப்போ உங்கள் தொலைபேசிக்கு இலக்கம் ஒன்று அனுப்பப்படும். இதனை மேலுள்ள படத்தில் காட்டியவாறு உள்ளதில் கொடுத்து “Finished Setup”என்பதை கிளிக் செய்யவும்.

இப்போ கீழ் கட்டியவாறு உள்ள பக்கத்தில் தேவையானதை தெரிவுசெய்யவும்.



அவ்வளவுந்தான்.  மேலே படிமுறை 03,05 இல் காட்டியதை மறவாமல் தெரிவுசெய்துவிடவும்.

இனிமேல் உங்கள் கூகிள் கணக்கில் உள்ள நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் படிமுறை 02 படத்தில் காட்டியவாறு செய்து படிமுறை 03 இனையும் செய்துவிட்டால் போதும்.


இனியென்ன நண்பர்களின் பிறந்ததினங்களை நீங்கள் மறந்தாலும் கூகிளானது இலவசமாக தங்கள் எந்தவகை கைத்தொலைபேசிக்கும் இலவசமாக குறுஞ்செய்தியை அனுப்பி நினைவுபடுத்திக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக