Translate

வியாழன், 4 டிசம்பர், 2014

Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவதற்கு..

நமது கணணியின் முன் திரையில் உள்ள மென்பொருட்களுக்கான Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இது சிலருக்கு வேண்டப்படாத ஒன்றாகக் கூட சிலவேளைகளில் அமையலாம். இது நீக்கப்பட்டால் நன்றாயிருக்குமென கூட சிலர் எண்ணியிருக்கலாம்.
எனவே அவ் அம்புக்குறி இருப்பதை விரும்பாதவர்களுக்காய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

இதற்கு முதலில் START இல் சென்று அங்கு தேடல் பகுதியில் “regedit”  எனக்கொடுத்து திறந்துகொள்ளவும். அல்லது START இல் சென்று RUN என்பதை கிளிக்செய்து “regedit” எனக்கொடுத்து திறந்துகொள்ளவும்.

பின்னர் இதிலே கீழ்காட்டிய ஒழுங்கில் சென்று “Explorer”” என்பதை அடையவும்.

 HKEY_CURRENT_USER\Software\ Microsoft\Windows\ CurrentVersion\Explorer


இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு வலப்பக்கத்தில் உள்ள link என்பதை Right-Click செய்து Modify என்பதைக் கொடுத்து திறந்துகொள்ளவும்.

இப்போ விண்டோ ஒன்று திறக்கும் அதிலே கீழ் காட்டியவாறு இலக்கத்தை மாற்றியபின் OK பண்ணவும்.


இப்போ Shortcut Iconஇல் உள்ள அம்புக்குறியானது நீக்கப்பட்டுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக